Published : 23 Jul 2020 09:53 AM
Last Updated : 23 Jul 2020 09:53 AM
மகனே நான் உன்னை அறிவேன். நீ தனிமையாக இருப்பது தெரியும். ஆனால் அப்படி இல்லை. இப்போது கூட, அவர் உனது கையைப் பிடித்து உன்னால் பார்க்க முடியாத வழிக்கு நடத்திக்கொண்டிருக்கிறார். நீ சந்தோஷமாக இல்லையென்றால் அதைத் தேவனின் அதிருப்தி என்று எடுத்துக்கொள்ள வேண்டாம். உண்மையோ அதற்கு மாறானது.
அவர் உன்னை நேசிப்பதன் அடையாளமாக இருக்கலாம். துயரத்தைத் தவிர்ப்பதற்கு உதவுவதன் வழியாக அவர் தனது நேசத்ததைக் காண்பிப்பதில்லை. அங்கே உன்னை இருத்திவைத்திருப்பதிலேயே அவர் தனது நேசத்தைக் காண்பிக்கிறார். அந்தத் துயரத்தின் வழியாக உன்னைவிட உயர்ந்த வேறொன்றுடன் அவர் உன்னைப் பிணைக்கிறார்.
உலகத்திலிருந்து உன்னை எடுத்து அதற்கப்பால் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க, அவர் அனுப்பும் தொந்தரவுகளை பொறுமையாக அனுபவிப்பது மட்டுமல்ல பரிசுகளாகவும் அவற்றைக் கருதி மதிக்க வேண்டும். நமக்கு நாம் வேண்டும் சந்தோஷங்களைவிட அரிய பரிசுகள் அவை. நீ குழந்தையாக இருந்தபோது நிலவும் நட்சத்திரங்களும் உனக்கு சேவை செய்ததை நீ அறிவாய். உனக்கு உன் வழியைக் காட்டியதையும். மற்றவர்களின் விழியிலிருந்து வரும் வெளிச்சம் அது. நல்முத்து. விழித்துக் கொள். திரும்பு. பார். வெளியே வா மகனே. நினைவில் கொள். ஆரம்பி.
(இயக்குநர் டெரன்ஸ் மாலிக்கின் ‘நைட் ஆப் கப்ஸ்’ திரைப்படத்தில் சொல்லப்படும் கவிதையின் தமிழ் வடிவம் இது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT