Last Updated : 11 Feb, 2025 05:58 AM

 

Published : 11 Feb 2025 05:58 AM
Last Updated : 11 Feb 2025 05:58 AM

நாம் யார் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்: சுவாமி சிதானந்த கிரி அருளுரை

சென்னை: யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா சார்​பில், சென்னை​யில் சிறப்பு சொற்​பொழி​வாற்றிய சுவாமி சிதானந்த கிரி, நாம் யார் என்பதை ஒவ்வொரு​வரும் உணர வேண்​டும் என்று தெரி​வித்​துள்ளார்.

யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா (YSS) என்ற மத சார்​பற்ற ஆன்மிக அமைப்பு, 1917-ம் ஆண்டு, பரமஹம்ஸ யோகானந்​த​ரால் நிறு​வப்​பட்​டது. அவரது உபதேச மொழிகளை உலகம் முழு​வதும் உள்ள மக்கள் அறிந்து கொள்​ளும் நோக்​கில் 1920-ல் நிறு​வப்​பட்ட சுய -உணர்தல் பெல்​லோஷிப்​பின் (Self Realisation Fellowship -SRF) ஒரு பகுதியாக இந்த அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைவராக சுவாமி சிதானந்த கிரி உள்ளார்.

மேரிலாந்​தில் உள்ள அன்னா​போலிஸில் 1953-ம் ஆண்டு பிறந்த சுவாமி சிதானந்த கிரி (கிறிஸ்​டோபர் ஹார்ட்​வெல் பக்லீ) சாண்​டி​யாகோ​வில் உள்ள கலிபோர்​னியா பல்கலைக்​கழகத்​தில் சமூக​வியல், தத்துவ மாணவராக இருந்​தார், 1970-ன் தொடக்​கத்தில் பரமஹம்ஸ யோகானந்​தரின் உபதேச மொழிகளால் ஈர்க்​கப்​பட்டு, 1977-ம் ஆண்டு என்சினிடாஸில் உள்ள எஸ்ஆர்​எஃப் ஆசிரம மையத்​தில் இணைந்​தார். பல்வேறு பயிற்சி​களைப் பெற்ற பின்னர், மிருணாளினி மாதா​வின் மறைவுக்​குப் பிறகு (03-08-2017) ஒய்எஸ்எஸ் அமைப்​பின் தலைவராக தேர்வு செய்​யப்​பட்​டார்.

ஆன்மிகம் மற்றும் கிரியா யோகா தொடர்பாக சுவாமி சிதானந்த கிரி​யின் சிறப்பு சொற்​பொழிவு, நேற்று முன் தினம் சென்னை​யில் நடைபெற்​றது. அப்போது அவர் பேசி​ய​தாவது: சென்னைக்கு அருகில் உள்ள பெரும்​புதூரில் தற்போது புதிய ஆசிரமம் அமைக்​கப்​பட்​டுள்​ளது. பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய கிரியா யோகம் மற்றும் அவரது அறிவுரைகளை பரப்பு​வதற்கு ஒய்எஸ்எஸ் அமைப்பு தீவிர அர்ப்​பணிப்​போடு செயல்​பட்டு வருகிறது. பரமஹம்ஸ யோகானந்தர் இயற்றிய ‘ஒரு யோகி​யின் சுயசரிதம்’ என்ற நூலை அனைவரும் படிக்க வேண்​டும். ‘எப்படி வாழ்​வது’ என்று அவர் கூறிய வழியில் நாம் அனைவரும் செயல்பட வேண்​டும். எப்போதும் மாறிக் கொண்​டிருக்​கும் உலகில் யோகானந்​தரின் அறிவுரைகள், ஒவ்வொருக்​கும் ஆன்மிக பொக்​கிஷங்​களாக உள்ளன.

கிரியா யோக பயிற்சி​கள், ஆன்மிக ஞானத்​துக்​கும் நவீனமய உலகில் வாழும் சமூகத்​துக்​கும் இடையே மிகப் பெரிய இணைப்புப் பாலமாக இருந்து வருகிறது. மனித வாழ்க்கை மகிழ்ச்சி, வெற்றி, அமைதி, தெய்வீக திட்​ட​மிடல் ஆகிய​வற்​றைக் கொண்​டது. அதன்படி நாம் எப்படி வாழ்​கிறோம் என்பது முக்​கி​யம். முதலில் நாம் யார் என்பதை ஒவ்வொரு​வரும் உணர்ந்து கொள்ள வேண்​டும். நமக்​குள் இருக்​கும் இறைத்தன்மையை அறிந்து கொள்ள வேண்​டும். மனித படைப்​பின் நோக்​கத்தை புரிந்து செயல்பட வேண்​டும். பரமஹம்ஸ யோகானந்​தரின் கிரியா யோக பயிற்​சி​யால் நமக்கு எதுவும் சாத்​தி​ய​மாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்​சி​யின் நிறை​வில் `ஒரு யோகி​யின் சுயசரிதம்’ ஆடியோ புக் (மலை​யாளம்), சுவாமி யுக்​தேஸ்வர் கிரி அருளிச்​செய்த ‘கைவல்ய தரிசனம்’ (The Holy Science) என்ற நூலின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிபெயர்ப்பு பிரதி​கள், பரமஹம்ஸ யோகானந்​தரின் ‘பரதத்துவ தியானங்​கள்’ நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரதி ஆகியன வெளி​யிடப்​பட்டன. அனைத்து வெளி​யீடு​களும் ஒய்எஸ்எஸ் புக் ஸ்டோரில் (yss.org/Books) கிடைக்​கின்றன. சொற்​பொழிவு நிகழ்ச்​சி​யில் 1,500-க்​கும் மேற்​பட்ட பக்தர்கள் பங்கேற்​றனர். ​காலை நிகழ்ச்​சியாக 1,000 பக்​தர்​கள் கலந்து ​கொண்ட ​தியான வகுப்பு நடை​பெற்​றது. யோகதா சத்​சங்க சகா ஆசிரமம் (சென்னை) தொடர்பான கூடு​தல் தகவல்களை +917550012444 என்ற எண் மூல​மாக​வும், chennaiashram@yssi.org என்ற மின்னஞ்​சல் மூல​மாகவும்​ பெறலாம்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x