Published : 24 Oct 2024 06:30 AM
Last Updated : 24 Oct 2024 06:30 AM
திருவாமூரில் அவதரித்த திருநாவுக்கரசர், அப்பர், மருள்நீக்கியார் என்று பல பெயர்களால் அறியப்படுகிறார். சகல கலை வல்லுநராகத் திகழ்ந்த அப்பர் பெருமான் தொண்டை நாட்டைத் தூய்மைப்படுத்தியவர். சிவபெருமானின் உண்மை நெறியறத்தை உலகுக்குத் தரும் பொருட்டு அவதரித்தவர் இவர். கடலூர் மாவட்டத்திலுள்ள திருமுனைப்பாடி நாடு என்ற ஊரில் புகழனார்-மாதினியார் தம்பதிக்கு மைந்தனாக அவதரித்தவர் மருள்நீக்கியார். இவரின் தமக்கையார் திலகவதி. சிறுவயது முதலே மருள்நீக்கியார் கலைகளை நன்கு கற்று வளர்ந்தார்.
தமக்கை திலகவதியாருக்கு சிவநெறிச் சீலரான கலிப்பகையாருடன் திருமணம் நிச்சயமானது. விதிவசத்தால் புகழனார் உயிரிழக்க நேரிட, கணவனைப் பிரியாத மாதினியாரும் உடன் இறந்தார். தொடர்ந்து திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட கலிப்பகையாரும் போரில் வீரமரணம் அடைந்தார். அவரையே கணவராக வரித்துவிட்டதால், திலகவதியார் தானும் உயிர் துறக்க துணிந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT