Last Updated : 23 May, 2024 06:25 AM

1  

Published : 23 May 2024 06:25 AM
Last Updated : 23 May 2024 06:25 AM

ப்ரீமியம்
2,568-வது புத்த பூர்ணிமா அனைவருக்கும் வழிகாட்டிய உத்தமர்

உலகில் வாழ்ந்து மறைந்த ஞானிகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய கௌதம புத்தர், தனது போதனைகள் மூலம் ஆன்மிக சாதகர்கள் மற்றும் பாமர மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்துள்ளார். புத்த மதம் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இவரது போதனைகளை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும், எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எப்போதும் இரக்க குணத்துடன் வாழ வேண்டும், அகந்தையை துறக்க வேண்டும், எதன் மீதும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும், தன்னுடைய பிறப்புக்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும் ஆகியவை புத்தரின் 6 முக்கியமான போதனைகள் ஆகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x