Published : 29 Jun 2023 06:32 AM
Last Updated : 29 Jun 2023 06:32 AM
எந்நாட்டவருக்கும் பொதுவான சிவனைப் போற்றும் 108 ஸ்தலங்களைப் பற்றிய விரிவான தகவல்களுடன் எழுதப்பட்டிருக்கும் நூல். காசி தரிசனம் கைலாச தரிசனம் என்னும் மூதுரைக்கு ஏற்ப காசியிலிருந்து தொடங்கி ராமேஸ்வரம் முடிய சிவாலயங்களின் தரிசனம் இந்நூலில் பரிபூரணமாகக் கிடைக்கிறது.
ஒவ்வொரு ஸ்தலத்தின் புராண ரீதியிலான பெருமை, ஆலய ஒழுங்குகள், திருவிழாக்கள், நம்பிக்கைகள் எனப் பலவும் படிப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதோடு, அந்த ஆலயத்திற்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்னும் அவாவையும் தூண்டும் வகையில் எழுதப்பட்டிருக்கின்றன. `மயிலையே கயிலை; கயிலையே மயிலை' என்று பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருப்போம். அதற்கான தாத்பர்யம் என்ன என்பதும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
சிவ ஸ்தலங்கள் 108 நாகர்கோயில் கிருஷ்ணன் நர்மதா பதிப்பகம், சென்னை. தொடர்புக்கு : 9840226661.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT