Published : 29 May 2023 02:48 PM
Last Updated : 29 May 2023 02:48 PM
ஐபிஎல் 2023 சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நேற்று கனமழை காரணமாக இன்றைக்கு ஆடுவதாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தோனி 5-வது முறையாக ரோஹித் சர்மாவுக்கு இணையாக ஐபிஎல் கோப்பையைத் வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நேற்று போட்டி நடக்காமல் போனதால் ரிசர்வ் நாளான இன்று நடைபெறுவது சிலருக்கு 2019 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதியை நினைவுபடுத்தக்கூடும். அந்த தொடரின் அரையிறுதி போர்த்தி மழையினால் இந்தியா - நியூஸிலாந்து ஆட்டம் ரிசர்வ் டேவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் நியூஸிலாந்தின் மேட் ஹென்றி மேக மூட்டமான வானிலை அமைய இந்திய பேட்டர்களை படாத பாடு படுத்தி இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படச் செய்தார்.
அன்றைய தினமும் தோனிதான் இந்திய அணியின் கடைசி வெற்றி நம்பிக்கையாக இருந்தார், ஆனால் தோனி, மார்ட்டின் கப்திலின் அட்டகாசமான பீல்டிங் மற்றும் த்ரோவுக்கு ரன் அவுட் ஆகி வெளியேற இந்திய அணியும் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்தப் போட்டி பல செண்ட்டிமெண்ட்களை உருவாக்கியது. இது தோனி இந்திய அணிக்காக ஆடிய கடைசி ஒரு நாள் போட்டி.
இப்போதும் ஐபிஎல் இறுதிப் போட்டி மழை காரணமாக இன்றைய தினமான ரிசர்வ் நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டதால் நியூஸிலாந்துக்கு எதிராக ஆனது போல் சிஎஸ்கேவின் தோல்வி, தோனியின் கடைசி போட்டி போன்ற எண்ணங்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தோனியின் இந்த ரிசர்வ் நாள் தோல்வி, அவரது கடைசிப் போட்டி துயரம் ரசிகர்களை மீண்டும் வந்து பேயாக அச்சுறுத்துகிறது. இதனை அவர்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு வாசகங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
தோனி கடைசியாக ரிசர்வ் டேயில் ஆடினார் என்று அந்தப் போட்டியின் படங்களையும் அவர் ரன் அவுட் ஆவதையும், அவுட் ஆகி பெவிலியன் நோக்கிச் செல்வதையும் ரசிகர்கள் வேதனையுடனும் மீண்டும் நடந்து விடுமோ என்ற அச்சத்துடனும் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றும் மழை வந்து ஆட முடியாது போனால், லீக் ஸ்டேஜில் அதிக புள்ளிகளுடன் முடிந்த குஜராத் டைட்டன்ஸ் சாம்பியன் என்று அறிவிக்கப்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT