Published : 11 Jun 2014 02:50 PM
Last Updated : 11 Jun 2014 02:50 PM
ஜமைக்காவில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்குச் சுருண்டது.
பிட்சில் ஒன்றுமேயில்லாவிட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மென்களின் உத்தி மோசமாக இருந்தது.கால்களை சோம்பேறித் தனமாக நகர்த்தினர்.
கிறிஸ் கெய்ல் தனது 100வது டெஸ்டில் பொறுப்பாக ஆடி 64 ரன்களை எடுத்தார்.
கிறிஸ் கெய்லும், போவெலும் மிகக் கவனமாக ஆடி 27 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 60 ரன்களைச் சேர்த்தனர்.
அப்போது ஆஃப் ஸ்பின்னர் மார்க் கிரெய்க் பந்தில், 28 ரன்கள் எடுத்திருந்த போவெல் எல்.பி. ஆனார்.
அதே ஓவரில் எட்வர்ட்ஸ் சோம்பேறித்தனமான ஃபுட் வொர்க்கால் சற்றே திரும்பிய பந்தை ஆட முயன்று பந்து மட்டையின் வெளிவிளிம்பில் பட்டு ஸ்லிப்பில் டெய்லரின் டைவிற்கு கேட்ச் ஆனது.
இடது கை வீரர் டேரன் பிராவோ களமிறங்கி ரன் எடுக்காத நிலையில் சோதி பந்தை அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதுவும் ஒரு மோசமான ஷாட்.
கெய்ல் 64 ரன்கள் எடுத்து சவுதீ பந்தில் ஆட்டமிழந்தார். சதமும் எடுக்கவில்லை தனது 7000 டெஸ்ட் ரன்களை எடுத்து முடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது அதுவும் நடைபெறவில்லை.
அதே ஓவரில் சாமுயெல்ஸிர்கு சவுதீ பந்து ஒன்று ரிவர்ஸ் ஸ்விங் ஆகி பேடைத் தாக்க நேராக எல்.பி. ஆகி வெளியேறினார்.
சந்தர்பால், ராம்தின் இணைந்து விக்கெட்டுகள் மேலும் சரிவடைவதை நிறுத்தினர். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 72 ரன்களைச் சேர்த்தனர்.
சந்தர்பால் மீண்டும் நின்று ஆடினார். ஆனால் இந்த முறை சற்றே ஆக்ரோஷம் காட்டினார். ராம்தின் 39 ரன்கள் எடுத்து சவுதீயின் மற்றொரு பந்திற்கு வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கிமார் ரோச் (4), டெய்லர் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் பென் 17 ரன்களையும், ஷில்லிங்போர்ட் 14 ரன்களையும் எடுக்க, சந்தர்பால் ஒரு முனையில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் 81.2 ஓவர்களில் 262/2 என்று அவுட் ஆனது.
டிம் சவுதீ, அறிமுக பவுலர் மார்க் கிரெய்க் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். தற்போதைய கேட்பன்களின் பேஷன் படி மெக்கல்லம் ஃபாலோ ஆன் கொடுக்க மறுத்தார்.
மீண்டும் நியூசிலாந்து களமிறங்கியபோது பீட்டர் ஃபுல்டன், டெய்லரின் அபார அவுட் ஸ்விங்கருக்கு காலியானார். பிறகு டெய்லர், கிமார் ரோச் அபாரமாக வீசினர். கேன் வில்லியம்சன் ஆஃப் ஸ்டம்பை கவர் செய்யாமல் ரோச் பந்தை ஆடாமல் விட பவுல்டு ஆனார்.
3ஆம் நாள் ஆட்ட முடிவில் லாதம் 8 ரன்களுடனும், இர்வுக்காவலன் சோதி 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT