Published : 18 Jun 2014 10:56 AM
Last Updated : 18 Jun 2014 10:56 AM

கும்ப்ளே சாதனை முறியடித்தார் ஸ்டுவர்ட் பின்னி

ஒருநாள் போட்டியில் சிறப்பான பந்துவீச்சு என்ற முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் அணில் கும்ப்ளே சாதனையை, இந்திய இளம் வீரர் ஸ்டூவர்ட் பின்னி முறியடித்தார்.

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

இந்தியாவின் ஆல்ரவுண்டரான ஸ்டூவர்ட் பின்னி 4.4 ஓவர்களில் 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வங்கதேசத்தை சரித்தார்.

இந்தப் போட்டியில் ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். இதுதான் ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர் ஒருவரின் சிறப்பான பந்துவீச்சு. முன்னதாக அனில் கும்ப்ளே 12 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

இந்திய அணி, ஓர் அணிக்கு எதிராக குறைவான ரன்களில் சுருண்டு அதில் வெற்றி கண்ட போட்டி இதுதான். இதற்கு முன்னர் 1985-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 125 ரன்களுக்கு சுருண்டு அதில் வெற்றி கண்டதே சாதனையாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x