Published : 16 Jun 2014 10:00 AM
Last Updated : 16 Jun 2014 10:00 AM
உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஆஸ்திரேலியா 6-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதியாட்டத்தின் 14-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ஹெர்ட்ஸ்பெர்கர் கோலடித்தார். இதன்பிறகு ஆட்டம் முற்றிலுமாக ஆஸ்திரேலியா வசமானது. 20-வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு முதல் கோலை அடித்த கிரில்லோ, 47 மற்றும் 53-வது நிமிடங்களில் மேலும் இரு கோல்களை அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆஸி.யின் கோவர், டர்னர், டுவையர் ஆகியோர் தலா ஒரு கோலடிக்க 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
தொடர்ந்து 2-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா, ஒட்டுமொத்தத்தில் 3-வது முறையாக உலக சாம்பியன் ஆகியிருக்கிறது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் அர்ஜென்டீனா 2-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது.
மகளிர் பிரிவு இறுதியாட்டத்தில் நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது. நெதர்லாந்து உலகக் கோப்பையை வெல்வது 7-வது முறையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT