Published : 04 Sep 2020 07:26 AM
Last Updated : 04 Sep 2020 07:26 AM
ஐபிஎல் 2020-க்காக யுஏஇ சென்றுள்ள சென்னை அணியில் அதன் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா கோபித்துக் கொண்டு வீடு திரும்ப அணியின் துணைக் கேப்டன் யார் என்ற கேள்விக்கு சிஎஸ்கே ருசிகரமாக பதில் அளித்துள்ளது.
தோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 2010, 2011, 2018 ஆகிய ஐபிஎல் தொடர்களில் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் துணைக் கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா அணி நிர்வாகத்துடன் கோபித்துக் கொண்டு தோனி சமாதானம் செய்தும் கேட்காமல் நாடு திரும்பி தற்போது மீண்டும் வர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் ரசிகர்கள் சிலர் ட்விட்டரில் சென்னை அணியின் வைஸ் கேப்டன் அதாவது துணை கேப்டன் யார் என்று வினவினர். அதற்கு சிஎஸ்கே தரப்பில் தோனியைச் சுட்டிக்காட்டி ‘வைஸ்’ கேப்டன் இருக்கும் போது வைஸ் கேப்டன் எதற்கு என்று ருசிகரமாக பதில் அளித்துள்ளது.
அதாவது ஆங்கிலத்தில் ‘வைஸ்’ என்றால் பாண்டித்தியமுள்ள, விவேகமுள்ள என்ற பொருள்கள் உண்டு. அத்தகைய குணமுடைய தோனி இருக்கும் போது துணை கேப்டன் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ருசிகர பதில் அளித்துள்ளது.
வாட்ஸ் அப் குழுவிலிருந்து ரெய்னா நீக்கம்?
சிஎஸ்கே அணி நிர்வாகத்துக்கும் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால், ரெய்னா ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ தொடரிலிருந்து விலகினார்.
கேப்டன் தோனி சமாதான முயற்சியும் தோல்வியடைந்தது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து ரெய்னாவை வாட்ஸ் அப் குழுவிலிருந்து சென்னை அணி நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீண்டும் அணிக்குள் நுழைய பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி ஆகியோரிடம் ரெய்னா முயற்சி செய்துவருவதாக தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT