Published : 31 Jan 2020 09:27 AM
Last Updated : 31 Jan 2020 09:27 AM
பிரீமியர் பாட்மிண்டன் லீக்கில்சென்னை சூப்பர் ஸ்டார்ஸ்அணி, புனே 7 ஏசஸ் அணியிடம் தோல்வியடைந்தது.
ஹைதராபாத்தில் உள்ள பாலயோகி உள்ளரங்க மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் கலப்பு இரட்டையர் பிரிவில் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை அணியின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஜெசிகா புக் ஜோடி 10-15, 12-15 என்ற நேர் செட்டில் புனே அணியின் கிறிஸ் அட்காக், கேப்ரியல் அட்காக் ஜோடியிடம் தோல்வி கண்டது.
இதையடுத்து நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ட்ரம்ப் ஆட்டத்தில் சென்னை அணியின் கிறிஸ்டி கில்மோர் 15-12, 15-6 என்ற நேர்செட்டில் ரிதுபர்னா தாஸைதோற்கடித்தார். இதனால் சென்னை 2-1 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னையின் லக்சயா சென் 13-15, 15-10, 8-15 என்ற கணக்கில் புனே வீரர் கீன் யூ லோவிடம் தோல்வியடைந்தார். இதனால் ஆட்டம் 2-2 என சமநிலையை எட்டியது.
இதையடுத்து நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் சாட்விக் சாய்ராஜ், சுமித் ரெட்டிஜோடி 12-15, 14-15 என்ற நேர் செட்டில் சிராக் ஷெட்டி, ஹேந்திரா ஜோடியிடம் வீழ்ந்தது. இந்த ஆட்டம் ட்ரம்ப் ஆட்டமாக அமைந்ததால் 2 புள்ளிகளை முழுமையாக பெற்ற புனே அணி 4-2 என முன்னிலை பெற்றது.
கடைசியாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் புனே அணியின் கசுமாசா சாகாய் 15-10, 15-12 என்ற நேர் செட்டில் சென்னை அணியின் சதீஷ்குமாரை வீழ்த்தினார். 5 ஆட்டங்களின் முடிவில் புனே 7 ஏசஸ் 5-2 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தசீசனில் ஹாட்ரிக் வெற்றியை பெற்ற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT