Published : 19 Dec 2019 04:45 PM
Last Updated : 19 Dec 2019 04:45 PM

மேக்ஸ்வெலை சில கோடிகளில் முந்திய பாட் கம்மின்ஸ்

பாட் கம்மின்ஸ் : கோப்புப்படம்

கொல்கத்தா

கொல்கத்தாவில் நடந்துவரும் 2020 சீசன் ஐபில் போட்டிக்கான ஏலம் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் இருவரையும் ஏலத்தில் எடுக்க கடும் போட்டி ஏற்பட்டது.

ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் உடல்நலம், மனநலம் சரியில்லாமல் கடந்த சில மாதங்களாக ஓய்வில் இருந்தாலும், அவரை ஏலத்தில் எடுப்பதற்கான ஆர்வம் மட்டும் குறையவில்லை. ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், சிறந்த மேட்ச்வின்னர் என்பதால், அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தொடக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிலும், அதன்பின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியிலும், கடந்த ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் மேக்ஸ்வெல் இருந்தார். ஆனால் கடந்த ஆண்டு டெல்லிஅணியில் சரிவர மேக்ஸ்வெல் விளையாடவில்லை என்றபோதிலும் அவரை அணியில் எடுப்பதற்கான ஆர்வம் மட்டும் குறையவில்லை.

அடிப்படை விலையாக மேக்ஸ்வெலுக்கு ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. டெல்லிஅணி ரூ.3 கோடிக்கும், பின்னர் ரூ.4.2 கோடிக்கும் விலை வைத்தது. ஆனால், கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி கடுமையாகப் போட்டியிட்டதால், மேக்ஸ்வெலுக்கு ரூ.5 கோடி விலை வைத்தது டெல்லி அணி.

ஆனால் கிங்ஸ்லெவன் அணி தொடர்ந்து விரட்டி ரூ.6 கோடிக்கு மேக்ஸ்வெலைக் கேட்டது. ரூ.7 கோடிக்கு டெல்லி அணி விரட்டியது. இரு அணி நிர்வாகங்களும் மேக்ஸ்வெலை எடுக்க கடும் போட்டியிடவே இறுதியாக ரூ.10 கோடிக்கு டெல்லி அணி மேக்ஸ்வெலை விலைக்கு வாங்கியது

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ்க்கு அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருந்தது. ஏலம்தொடங்கியவுடனே டெல்லி அணி ரூ.2.4 கோடிக்கு கேட்டது. ஆனால் ஆர்சிபி ரூ.5 கோடிக்கு கம்மின்ஸுக்கு விலை வைத்தது. டெல்லி அணி ரூ.5.25 கோடிக்கு கம்மின்ஸை ஏலம் கேட்டது.

ஆனால், கம்மின்ஸுக்கு ரூ.6.25 கோடியாக ஆர்சிபி விலை வைக்க, டெல்லி அணி ரூ.7 கோடிக்கு ஏலம் கேட்டது. இரு அணிகளும் கடுமையாக ஏலத்தில் மோதிக்கொண்டனர். இறுதியாக ஏலத்தில் நுழைந்த கொல்கத்தா அணி ரூ.15.5 கோடிக்கு கம்மின்ஸை விலைக்கு வாங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x