Published : 18 Dec 2019 01:17 PM
Last Updated : 18 Dec 2019 01:17 PM
விசாகப்பட்டிணத்தில் இன்று பகலிரவாக நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள மே.இ.தீவுகள் அணி டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது நடந்து வரும் ஒருநாள் தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத்தீவுகள் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில், 2-வது ஒருநாள் ஆட்டம், விசாகப்பட்டிணத்தில் இன்று பகலிரவாக நடக்கிறது. டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணியின் கேப்டன் பொலார்ட் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்க புரி என்பதால், சேஸிங்கை தேர்வு செய்துள்ளார்.
மே.இ.தீவுகள் அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அம்பரிஸுக்கு பதிலாக லூயியிஸும், ஜூனியர் வால்ஷுக்கு பதிலாக கியர் பியரேவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. ஷிவம் துபேவுக்கு பதிலாக வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மற்ற வகையில் எந்த மாற்றமும் செய்யவி்லலை. தாக்கூரைத் தேர்வு செய்ததற்கு பதிலாக பேட்டிங் ஆடுகளமான இதி் கூடுதலாக பேட்ஸ்மேனைத் தேர்வு செய்திருக்கலாம், அதை விடுத்து தாக்கூருக்கு வாய்ப்பு அளித்தது எந்தவிதத்தில் பலன் அளிக்கப்போகிறது எனத் தெரியவில்லை.
ஆடுகளம் எப்படி:
விசாகப்பட்டிணம் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சொர்க்கபுரி என்று உறுதியாகக் கூறலாம். இந்த ஆடுகளத்தில் முதலில் பேட் செய்யும் அணி சராசரியாக 280 ரன்களை எடுக்க முடியும். முதலில் பேட்டிங் செய்யும் அணி எடுக்கும் ஸ்கோரை சேஸிங் செய்யும் அணி எளிதாக விரட்ட முடியும்.
பந்துகள் பேட்ஸ்மேனை நோக்கி நன்றாக எழும்பி வரும். இதனால் பேட்ஸ்மேன்கள் அடித்து ஷாட்களை ஆடுவதற்கும், ரன்களைக் குவிப்பதும் எளிது. இந்திய அணி வீரர்கள் எந்த அளவுக்கு அடித்து ஆட முடியுமோ அதே அளவுக்கு மே.இ.தீவுகள் அணியினரும் விளாசலாம். ஆனால், இரு அணியிலும் பந்துவீச்சாளர்கள் நிலைமைதான் பரிதாபம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT