Published : 17 Dec 2019 01:38 PM
Last Updated : 17 Dec 2019 01:38 PM
இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாட உள்ள ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக ஆடி சதங்களாக அடித்த லபுஷேன் இந்தியத் தொடருக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான லபுஷேனின் சராசரி 58.05 என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 5 ஆண்டுகளுக்குப்பின் ஆல்ரவுண்டர் ஷான் அபாட் சேர்க்கப்பட்டுள்ளார், உலகக் கோப்பைப் போட்டிக்குத் தேர்வு செய்யப்படாத ஜோஷ் ஹேசல்வுட், சுழற்பந்துவீச்சாளர் ஆஸ்டன் ஆகர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம் முக்கிய வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், நேதன் லயன் ஆகியோர் சேர்க்கப்படவில்லை.
இதுகுறித்து அணியின் தேர்வுக்குழுத் தலைவர் டிரிவர் ஹான்ஸ் கூறுகையில் " மேக்ஸ்வெலின் உடல்நிலை கருதி அவருக்கு இன்னும் வாய்ப்பு அளிக்கவில்லை. விரைவில் மேக்ஸ்வெல் உள்நாட்டுப் போட்டிகளுக்குத் திரும்புவார் என்று நம்புகிறேன். அவரின் உடல் நிலை மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் எவ்வாறு விளையாடுகிறார் என்பதுகுறித்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். இந்திய ரசிகர்களும் டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோரின் ஆட்டத்தைக் காணஆர்வத்துடன்இருக்கிறார்கள்" எனத் தெரிவித்தார்
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 14-ம் தேதி மும்பையிலும், 17-ம்தேதி ராஜ்கோட்டிலும், 19-ம் தேதி பெங்களூருவிலும் நடக்கின்றன.
ஆஸ்திரேலிய அணி விவரம்:
ஆரோன் பிஞ்ச்(கேப்டன்), ஷான் அபாட், ஆஷ்டன் ஆகர், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், பீட்டர் ஹேன்ட்ஸ்கம்ப், ஜோஷ் ஹேசல்வுட், மார்னஸ் லாபுஷேன், கேன் ரிச்சார்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்ப்பா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT