Published : 14 Dec 2019 08:01 PM
Last Updated : 14 Dec 2019 08:01 PM
சச்சின் டெண்டுல்கர் பொதுவாக வெளிப்படையாக தன்னுடைய பேட்டிங் உத்தி உள்ளிட்டவற்றை விவாதிக்க மாட்டார், சுனில் கவாஸ்கர், அச்ரேக்கர், அணியின் அனுபவ வீரர்களான ராகுல் திராவிட், லஷ்மண் போன்றவர்களிடம்தான் விவாதிப்பார்.
ஆனால் அப்படிப்பட்ட சச்சின் டெண்டுல்கருக்கே சென்னை தாஜ்கொரமாண்டல் விடுதி ஊழியர் ஒருவர் சச்சினின் முழங்கை கார்டு மாற்றவேண்டியது பற்றி ஆலோசனை வழங்கியுள்ளார், சச்சின் அவர் ஆலோசனையை ஏற்று முழங்கை கார்டை மாற்றி வடிவமைத்தது குறித்து ஏற்கெனவே ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர், “எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
சென்னையில் ஒரு டெஸ்ட் தொடரின் போது Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்” என்று நெட்டிசன்களிடம் உதவி கோரியுள்ளார்.
இதனையடுத்து எவ்வளவு பெரிய நட்சத்திர வீரர், தன் வாழ்க்கையில் சந்தித்த சிறு சிறு விஷயங்கள் மற்றும் மனிதர்களைக் கூட நினைவு வைத்துக் கொண்டுள்ளார் என்று நெட்டிசன்கள் அவரைப் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT