Published : 11 Dec 2019 11:09 AM
Last Updated : 11 Dec 2019 11:09 AM
`ஹீரோ ஐ லீக்` கால்பந்துப் போட்டித் தொடரில், மினர்வா எஃப்சி அணி(பஞ்சாப் அணி) 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை சிட்டி எஃப்.சி. அணியை வென்றது. நேற்று லூதியாணாவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சிட்டி எஃப்சி அணியும், மினர்வா அணியும் மோதின.
இதில் மினர்வா அணி சிறப்பாக விளையாடி 3 கோல்களை செலுத்தியது. பதிலுக்கு சென்னை சிட்டி எஃப்.சி. அணியால் ஒரு கோலை மட்டுமே போட முடிந்தது. முதல் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை.
2-வது பாதியில் மினர்வா அணி வீரர் ஆசர் பியரிக் திபன்டா 78-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். இதையடுத்து சுதாரித்து விளையாடிய சென்னை அணி பதிலுக்கு 85-வது நிமிடத்தில் ஒரு கோலைச் செலுத்தியது. சென்னை வீரர் பெட்ரோ மான்சி இந்த கோலைச் செலுத்தினார்.
இதனால், ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. ஆனால் ஆட்டம் முடிய 3 நிமிடங்களே இருந்த நிலையில் மினர்வா அணி மேலும் 2 கோல்களைப் போட்டது. இதனால் அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணியை வீழ்த்தியது.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT