Published : 10 Dec 2019 10:45 AM
Last Updated : 10 Dec 2019 10:45 AM

கால்பந்தில் இந்தியாவுக்கு தங்கம்

காத்மாண்டு

தெற்காசிய விளையாட்டில் மகளிருக்கான கால்பந்தில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது. 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான கால்பந்தில் தங்கப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் நேற்று இந்தியா - நேபாளம் அணிகள் மோதின.

இதில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. தெற்காசிய விளையாட்டில் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும்.

இந்திய அணி சார்பில் 18 மற்றும் 56-வது நிமிடங்களில் தேவி பாலா கோல் அடித்து அசத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x