Published : 30 Nov 2019 10:14 AM
Last Updated : 30 Nov 2019 10:14 AM
சையது மோடி சர்வதேச பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றில் தோல்வியடைந்தார்.
லக்னோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 7-வது இடத்தில் உள்ள கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்த்து விளையாடினார். 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-21, 19-21 என்ற நேர் செட்டில் ஸ்ரீகாந்த் தோல்வியடைந்தார்.
அதேவேளையில் மற்றொரு இந்திய வீரரான சவுரப் வர்மா அரை இறுதி சுற்றில் கால் பதித்தார். உலக தரவரிசையில் 36-வது இடத்தில் உள்ள சவுரப் வர்மா கால் இறுதி சுற்றில் 41-ம் நிலை வீரரான தாய்லாந்தின் குன்லவுத் விட்டிட்சரனை எதிர்த்து விளையாடினார்.
இதில் சவுரப் வர்மா 21-19, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 40 நிமிடங்கள் நடைபெற்றது. அரை இறுதியில் 44-ம் நிலை வீரரான கொரியாவின் ஹீயோ குவாங் ஹீயுடன் மோதுகிறார் சவுரப் வர்மா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT