Published : 22 Nov 2019 11:06 AM
Last Updated : 22 Nov 2019 11:06 AM
இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகலிரவு போட்டியாக கொல் கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் தொடங்குகிறது.
பாரம்பரிய வடிவிலான டெஸ்ட் போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வர் அதிகரிக்கும் விதமாக கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி வழங்கியது. எனினும் தற்போதுதான் பகலிரவு டெஸ்ட் போட்டியில் காலடி எடுத்து வைக்கிறது பிசிசிஐ. அதுவும் புதிய தலைவரான கங்குலியின் முயற்சியால் சாத்தியப்பட்டுள்ளது.
முதல் முறையாக இந்தியாவில் மின்னொளியில் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களிடமும் பேரார்வம் தொற்றிக் கொண்டுள்ளது. இதன் விளைவாக முதல் 4 நாட்களுக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த பிங்க் பந்து டெஸ்ட் போட்டியை திருவிழா போன்று நடத்துவதற்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
ராணுவ பாராசூட் சாகச வீரர்கள் அந்தரத்தில் பறந்து வந்தபடி இரு அணிகளின் கேப்டன்களிடம் பிங்க் பந்தை வழங்குவது, போட்டியை வங்க தேச பிரதமர் ஹசினா ஷேக் மணி அடித்து தொடங்கி வைப்பது, இரு அணிகளின் முன்னாள் கேப்டன் களுக்கு பாராட்டு விழா, இசை நிகழ்ச்சி, இந்திய கிரிக்கெட் ஜாம் பவான்கள் கலந்து கொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி என பகலிரவு டெஸ்ட் போட்டியை அமர்க் களப்படுத்த அனைத்து நடவடிக் கைகளையும் எடுத்துள்ளது மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம்.
பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு எஸ்ஜி வகை பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது. சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு பிங்க் பந்தை கவனித்து விளையாடுவது கடினம் என்று சில வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பனி பொழிய தொடங்கிவிட்டால் பந்து வீச்சாளர்கள் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியது இருக்கும்.
அனைத்து மிகைப்படுத்தல் களுக்கும் மத்தியில், இந்திய அணி தொடர்ச்சியாக 12-வது முறையாக உள்நாட்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதில் முனைப்புடன் உள்ளது. இந்தூரில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.
இந்த டெஸ்டில் 14 விக்கெட்கள் வேட்டையாடிய மொகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் வேகக்கூட்டணி மீண்டும் ஒருமுறை வங்கதேச பேட்ஸ்மேன்களுக்கு தொல்லைகள் கொடுக்க ஆயத்த மாக உள்ளனர். கொல்கத்தா ஆடு களத்தில் காணப்படும் அதிகப் படி யான புற்கள் மற்றும் தொடக் கத்திலேயே பிங்க் பந்தில் காணப் படும் அபரிமிதமான ஸ்விங், நகர்வு ஆகியவை இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாத கமாக இருக்கக்கூடும்.
அதேவேளையில் புதிய தொடக்க ஜோடியான ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் ஆகியோர் மீண்டும் ஒரு முறை ரன் வேட்டை யாடக்கூடும் என கருதப்படுகிறது. இந்தூர் டெஸ்டில் மயங்க் அகர் வால் 243 ரன்கள் விளாசியிருந்தார். இது வங்கதேச அணி ஒரு இன் னிங்ஸில் சேர்த்த ரன்களைவிட (150 மற்றும் 213) அதிகம்.
வங்கதேசமும் இதற்கு முன்னர் பகலிரவு டெஸ்டில் விளை யாடியது இல்லை. ஏற்கெனவே பேட்டிங்கில் தடுமாறி வரும் அந்த அணிக்கு மீண்டும் ஒரு சோதனை காத்திருக்கிறது. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக முஸ் டாபிஸூர் ரஹ்மான், அல் அமின் ஹொசைன் சேர்க்கப்படக்கூடும்.
பிங்க் பந்தில் என்ன வித்தியாசம்
சிவப்பு பந்தை 20 முதல் 30 ஓவர்களுக்குப் பிறகு ஒரு பகுதியை நன்கு தேய்த்து பளபளப்பாக்கியும், மறு பகுதியை கடினத் தன்மையுடன் விட்டுவிட்டால் நேரம் செல்லச் செல்ல பந்து ரிவர்ஸ் ஸ்விங்குக்கு ஒத்துழைக்கும். ஆனால் பிங்க் பந்தில் கூடுதல் நிறமி மற்றும் அரக்கு கலவையால் தொடக்கத்திலேயே பந்துகள் ஸ்விங் ஆகும். ஆனால் ஆட்டத்தின் பிற்பாதியில் பந்து ரிவர்ஸ் ஸ்விங்குக்கு கைகொடுக்குமா என்பது ஆடுகளத்தின் கடினத் தன்மையை பொறுத்தே தெரிய வரும்.
பகலிரவு டெஸ்ட் இதுவரை...
11 பகலிரவு டெஸ்ட் போட்டிகள் இதுவரை நடைபெற்றுள்ளது. இதில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 5 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் வெற்றி கண்டுள்ளது. அந்த அணி தனது சொந்த மண்ணில் பிங்க் பந்து டெஸ்டில் நியூஸி லாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை அணிகளை வீழ்த்தி யுள்ளது. பாகிஸ்தான் அணி துபாயில் இரு பகலிரவு டெஸ்டில் விளையாடி உள்ளது.
இதில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய நிலையில் இலங்கையிடம் தோல்வி கண்டது. மேலும் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளையும் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வேவையும் நியூஸிலாந்து, இங்கிலாந்தையும், மேற்கிந்தியத் தீவுகள், இலங்கையையும் தங்களது சொந்த மண்ணில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளன.
நேரம்: பிற்பகல் 1 மணி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT