Published : 14 Nov 2019 02:55 PM
Last Updated : 14 Nov 2019 02:55 PM
வங்கதேசத்துக்கு எதிராக நாக்பூர் டி20 போட்டியில் எந்த நேரத்தில் ஹாட்ரிக் எடுத்தாரோ இந்திய ஸ்விங் பவுலர் தீபக் சாஹர், தொடர்ந்து ஹாட்ரிக் அவரை துரத்தியே வருகிறது.
3வது டி20 போட்டியில் ஹாட்ரிக் எடுத்த அவர் பிறகு 3 நாட்களில் 2வது ஹாட்ரிக்கை எடுத்ததோடு 13வது ஓவரில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில் மேலும் ஒரு ஹாட்ரிக் வாய்ப்பு அவருக்கு இன்றும் (வியாழன், 14-11) கிடைத்தது. திருவனந்தபுரத்தில் உ.பி. அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி ட்ராபி போட்டியில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் பவுலர் தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
ஆனால் இம்முறை ஹாட்ரிக் வாய்ப்பு இடையில் கொடுத்த சிங்கிளினால் கைகூடவில்லை.
20வது ஓவரின் முதல் பந்தில் மோசின் கானை வீழ்த்திய தீபக் சாஹர் அடுத்த பந்தில் சிங்கிள் கொடுத்தார், பிறகு மீண்டும் 3 மற்றும் 4ம் பந்துகளில் ஷானு சைனி, ஷுபம் சவ்பே ஆகியோரை வீழ்த்தினார். ஆனால் ஹாட்ரிக் கைகூடவில்லை.
சாஹர் ஆனால் இந்த முறை 46 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது, ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT