Published : 19 May 2014 12:38 PM
Last Updated : 19 May 2014 12:38 PM

ஸ்பெயின் லீக்: அட்லெடிகோ சாம்பியன்

ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 18 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இதன்மூலம் ஸ்பெயின் லீக்கில் 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுடன் பகிர்ந்து கொண்டது அட்லெடிகோ மாட்ரிட்.

பார்சிலோனாவில் சனிக்கிழமை இறுதிப் போட்டியில் பார்சிலோனா அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ததன் மூலம் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது அட்லெடிகோ அணி. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் அலெக்ஸ் சான்செஸ் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் (அதாவது 49-வது நிமிடம்) பார்சிலோனாவுக்கு பதிலடி கொடுத்தது அட்லெடிகோ. அந்த அணியின் டீகோ காடின்ஸ் தலையால் முட்டி கோலடிக்க, ஸ்கோர் சமநிலையை எட்டியது. இதன்பிறகு இரு அணிகளும் கோலடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

இறுதி போட்டியைப் பொறுத்த வரையில் போட்டியை நடத்தும் அணி வெற்றி பெற வேண்டும். அதேநேரத்தில் எதிரணி டிரா செய்தாலே சாம்பியனாகி விடலாம். அதன் அடிப்படையில் பார்சிலோனாவுடன் டிரா செய்த அட்லெடிகோ கோப்பையைக் கைப்பற்றியது.

அட்லெடிகோ அணியின் மேலாளர் டீகோ சைமன் கூறுகையில், “அளவற்ற மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கிறேன். அதை வெளிப்படுத்த முடியாது. எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்த வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதுமே கடினமான உழைப்புக்கு மாற்றான விஷயம் எதுவும் இருக்க முடியாது. எங்கள் அணி அதை புரிந்துகொண்டு சிறப் பாக விளையாடி வெற்றி கண் டுள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் அணியின் வரலாற்றில் இறுதி ஆட்டம் நடைபெற்ற தினம் மிக முக்கியமான நாளாகும். அனைத்து ஆண்டுகளிலுமே பட்டம் வெல்வதற்காக நாங்கள் கடுமையாகப் போராடியதோடு, வியப்பளிக்கும் வகையில் விளை யாடியிருக்கிறோம். கடைசிப் போட்டியில் இரு முன்னணி அணிகள் மோதியது சவாலானது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x