Published : 03 May 2014 10:42 AM
Last Updated : 03 May 2014 10:42 AM

முதல் வெற்றியைப் பெறுமா மும்பை?: பலம் வாய்ந்த பஞ்சாபுடன் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியில் நடப்பு சாம்பியன் என்ற பெருமையுடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் தோல்வியடைந்து விட்டது. இந்நிலையில் பங்கேற்ற 5 போட்டிகளிலும் வென்று சாதனை படைத்துள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை மும்பை இன்று எதிர்கொள்ள இருக்கிறது.

மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால், அந்த அணிக்கு இப்போட்டி கடும் சவால் நிறைந்ததாக மட்டுமல் லாது நெருக்கடியாகவும் இருக்கும் என்பதில் சந்தேக மில்லை. அதே நேரத்தில் பஞ்சாப் அணி தங்கள் வெற்றிப் பயணத்துக்கு இடையூறு ஏற்பட்டு விடக் கூடாது என்ற உறுதியுடன் களமிறங்கும்.

எனவே மைக் ஹசி, ரோஹித் சர்மா, கோரே ஆண்டர்சன், அம்பட்டி ராயுடு என வலுவான பேட்ஸ் மேன்களைக் கொண்டுள்ளது மும்பை அணி. ஆனாலும் யாருமே நிலைத்து நின்று விளையாடதது பேட்டிங்கில் பெரும் பின்ன டைவை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அணி கடைசியாகஹைதராபாத் திடம் தோல்வியடைந்தது.

அந்த ஆட்டத்தில் போல்லார்ட் அதிரடி யாக விளையாடி 48 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். இதுபோல மும்பை அணியின் மற்ற பேட்ஸ் மேன்களும் சிறப்பாக விளையாடி னால் மட்டும் மும்பையால் வெற்றியை எட்ட முடியும். மலிங்கா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஒஜா என சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க பந்து வீச்சாளர்கள் மும்பை அணியில் இருந்தாலும் வெற்றி எட்டாக் கனியாகவே இருக்கிறது.

அதே நேரத்தில் பஞ்சாப் அணியில் மேக்ஸ்வெல் மிகப்பெரிய பலமாக உள்ளார். பேட்டிங்கின் போது அவர் களத்தில் நின்றாலே எதிரணிக்கு தோல்வி நிச்சயம் என்பதை கடந்த போட்டிகளில் உணர்த்தியுள்ளார். கொல்கத்தாவுக்கு எதிராக மேக்ஸ்வேல் அதிக ரன்களை எடுக்காவிட்டாலும், பந்து வீச்சாளர்கள் அப்போட்டியில் வெற்றியை வசமாக்கித் தந்தனர். சேவாக், மில்லர், பெய்லி, புஜாரா உள்ளிட்ட சிறந்த பேட்ஸ்மேன்கள் பஞ்சாப் அணியின் கூடுதல் பலம்.

மற்றொரு ஆட்டம்

டெல்லியில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே தலா 5 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளையும், டெல்லி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

மும்பை - பஞ்சாப்,போட்டி நேரம் : மாலை 4
டெல்லி ராஜஸ்தான், போட்டி நேரம் : இரவு 8

நேரடி ஒளிபரப்பு : சோனி சிக்ஸ் / செட் மேக்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x