Published : 21 Nov 2013 11:02 PM
Last Updated : 21 Nov 2013 11:02 PM

அதிவேக 5,000: ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார் கோலி!

குறைந்த எண்ணிக்கையிலான சர்வதேச ஒருநாள் போட்டிகளில், 5,000 ரன்களைக் கடந்து, மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் உலக சாதனையை விராட் கோலி சமன் செய்தார்.



கொச்சியில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

விவியன் ரிச்சர்ட்சன் 114 ஒருநாள் போட்டிகளில் 5,000 ரன்களைக் கடந்து நிகழ்த்திய சாதனையை, விராட் கோலியும் 114 ஒருநாள் போட்டிகளில் கடந்து சாதனையை நிகழ்த்தினார்.

இன்றைய போட்டியில் கோலி குவித்த 82 ரன்களின் உறுதுணையுடன், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 213 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இந்தியா எளிதில் எட்டி வெற்றி பெற்றது.

தற்போது, ஒருநாள் போட்டிகளில் அதிவேக 5,000 ரன்கள் என்ற உலக சாதனைப் பட்டியலில் விராட் கோலி, ரிச்சர்ட்சன் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

கோலிக்கு முன்னதாக அதிவேக 5000 ரன்களை எடுத்த இந்திய வீரர் செளரவ் கங்குலி. அவர் 126 இன்னிங்ஸ்சில் 5,000 ரன்களைக் கடந்தார். அவர் இப்போது இந்தப் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளார்.

அதிவேக 5,000 ரன்கள் பட்டியல்: ரிச்சர்ட்சன் - 114, விராட் கோலி 114, பிரையன் லாரா 118, கார்டன் கிரீனிஜ் 121, டி வில்லியர்ஸ் - 124, செளரவ் கங்குலி 126.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x