Published : 15 Jun 2014 10:31 AM
Last Updated : 15 Jun 2014 10:31 AM

கோஸ்டாரிகாவிடம் உருகுவே அதிர்ச்சித் தோல்வி

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் அதிர்ச்சித் தோல்வி ஏற்பட்டுள்ளது. பலமான உருகுவே அணியை கோஸ்டாரிகா அணி 3- 1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் வீழ்த்தியது.

உருகுவே அணியின் மிக முக்கிய ஸ்ட்ரைக்கர் லூயிஸ் சுவாரேஸ் விளையாடததால் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் மிகப்பெரிய அதிர்ச்சித் தோல்வி நிகழ்ந்தது.

உருகுவேயே முதலில் 1 கோல் அடித்து முன்னிலை வகித்தது. ஆனால் இடைவேளைக்குப் பிற்கு 10 நிமிடங்களில் ஆட்டம் அப்படியே தலைகீழாக மாறியது.

உருகுவே அணிக்கு எடின்சன் கவானி முதல் கோலை அடித்தார். ஆனால் கோஸ்டாரிகா திடீர் விஸ்வரூபம் கண்டு 3 நிமிடங்களில் 2 கோல்களை அடிக்க உருகுவே அதிர்ச்சியடைந்தது. ஜோயேல் கேம்பெல் மற்றும் ஆஸ்கர் டுவார்ட் ஆகியோர் இந்த அதிர்ச்சி கோல்களை அடித்தனர்.

பிறகு 3வது கோலை பதிலி வீரர் மார்கோஸ் யுரீனா அடித்தார். மேலும் இந்த உலகக் கோப்பையின் முதல் சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்ட அதிர்ச்சியும் இந்த ஆட்டத்தில் நடந்தது.

உருகுவே வீரர் மாக்ஸி பெரெய்ராவுக்கு சிகப்பு அட்டக் காண்பிக்கபப்ட்டு வெளியேற்றப்பட்டார். நல்ல வேளையாக அது கடைசி நிமிடங்களில் நிகழ்ந்ததால் உருகுவே ஓரளவுக்குப் பிழைத்தது.

ஆட்டத்தில் மோதல் போக்கும் இருந்தது 22வது நிமிடத்தில் உருகுவே கேப்டன் டீகோ லுகானோவை கோஸ்டாரிகா வீரர் ஜூனியர் டயஸ் பிடித்துக் கீழே தள்ள பெனால்டி கிக் உருகுவே சார்பாக வழங்கப்பட 24வது நிமிடத்தில் அதனை எடின்சன் கவானி கோல் அடித்தார். உருகுவே 1-0 என்று முன்னிலை வகித்தது.

54வது நிமிடத்திலிருந்து கோஸ்டாரிகா ஆதிக்கம் தொடங்கியது. முதலில் கிறிஸ்டியன் காம்போவா பந்தை அருமையாக கடைந்து கொண்டு வந்து பாஸ் ஷாட் அடிக்க அதனை கேம்பெல் கோலாக மாற்றினார். ஆட்டம் 1௧ என்று சமன் ஆனது.

3 நிமிடங்கள் கழித்து மற்றொரு தாக்குதல் மூவில் டுவார்ட்டே அருமையாக தலையால் முட்டி 2வது கோலை அடித்து கோஸ்டாரிகாவுக்கு முன்னிலை கொடுத்தார். பிறகு உருகுவே ஆட்டம் சொதப்பலாக மாற 84வது நிமிடத்தில் பதிலி வீரர் மார்கோ யுரீனா 3வது கோலை அடிக்க உருகுவே அதிர்ச்சித் தோல்வி தழுவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x