Published : 27 Mar 2014 11:29 AM
Last Updated : 27 Mar 2014 11:29 AM

ஜெர்மன் லீக்: சாம்பியன்ஷிப்பை உறுதி செய்தது பேயர்ன் மூனிச்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் புந்தேஸ்லிகா என்றழைக்கப்படும் ஜெர்மன் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் மூனிச் அணி 24-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறது.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில் ஹெர்தா பெர்லின் அணியைத் தோற்கடித்ததன் மூலம் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது பேயர்ன் மூனிச். இன்னும் 7 ஆட்டங்கள் மீதமுள்ள நிலையில் தொடர்ச்சியாக 19-வது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம் சாம்பியனாகியிருக்கிறது பேயர்ன் மூனிச்.

புதிய பயிற்சியாளரான பெப் கார்டியோலாஸ் பயிற்சியின் கீழ் இந்த சீசனில் களமிறங்கியுள்ள பேயர்ன் மூனிச் அணி, கடந்த 9 மாதங்களில் வென்றுள்ள 3-வது பட்டம் இது. முன்னதாக கடந்த ஆகஸ்டில் ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான சூப்பர் கோப்பை போட்டியிலும், டிசம்பரில் நடைபெற்ற கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பையிலும் பேயர்ன் மூனிச் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை 7 ஆட்டங்களுக்கு முன்னதாகவே சாம்பியன்ஷிப்பை உறுதி செய்ததன் மூலம் புதிய சாதனை படைத்திருக்கிறது பேயர்ன் மூனிச். முன்னதாக கடந்த சீசனில் 8 ஆட்டங்களுக்கு முன்னதாக பேயர்ன் மூனிச் சாம்பியன்ஷிப்பை உறுதி செய்ததே சாதனையாக இருந்தது. பேயர்ன் மூனிச் இன்னும் 7 ஆட்டங்களில் விளையாட வேண்டியதிருந்தாலும், புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் போரஷியா டார்ட்மன்ட் அணியைவிட 25 புள்ளிகள் முன்னிலை பெற்றிருப்பதன் மூலம் அந்த அணிக்கு 24-வது சாம்பியன்ஷிப் சாத்தியமாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x