Published : 17 Sep 2013 11:09 AM
Last Updated : 17 Sep 2013 11:09 AM
வங்கதேசத்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரெயொரு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள நியூஸிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சௌதி இடம்பிடித்துள்ளார்.
நியூஸிலாந்து அணி, வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக இரு டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, ஒரேயொரு இருபது ஓவர் போட்டியில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் அக்டோபர் 9-ம் தேதியும், ஒருநாள் தொடர் 29-ம் தேதியும் தொடங்குகிறது.
கணுக்கால் காயம் காரணமாக டெஸ்ட் அணியில் சேர்க்கப்படாத டிம் சௌதி, ஒருநாள் தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார். புதுமுக வீரராக ஆன்டன் டேவ்சிச் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் நடைபெற்ற இந்திய ஏ அணிக்கெதிரான போட்டியில் 115 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
அணியை அறிவித்தப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நியூஸிலாந்து தேர்வுக் குழு தலைவர் புரூஸ் எட்கர், “ஒருநாள் தொடருக்கு முன்னதாக கணுக்கால் காயத்தில் இருந்து டிம் சௌதி முழுமையாக மீண்டுவிடுவார் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.
அதேநேரத்தில் நியூஸிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்டில், சுழற்பந்து வீச்சாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் காயம் காரணமாக வங்கதேசத் தொடரில் பங்கேற்கவில்லை.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணி விவரம்:
பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன்), கேரி ஆண்டர்சன், ஆன்டன் டேவ்சிச், கிராண்ட் எல்லியட், டாம் லதாம், மிட்செல் மெக்லீனாகான், நாதன் மெக்கல்லம், கைல் மில்ஸ், ஆடம் மில்னி, காலின் மன்றோ, ஜேம்ஸ் நீஷாம், ஹாமிஷ் ரூதர்போர்டு, டிம் சௌதி, ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT