Published : 26 Nov 2013 12:00 AM
Last Updated : 26 Nov 2013 12:00 AM
பிரேசிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் ஜெர்மனியின் செபஸ்டியான் வெட்டல் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் இந்த ஆண்டு பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 13-வது வெற்றியை அவர் பெற்றார். ஒரே ஆண்டில் 13 பந்தயங்களில் வெற்றி என்ற மைக்கேல் ஷூமேக்கரின் 2004-ம் ஆண்டு சாதனையை வெட்டல் சமன் செய்தார். ஷூமேக்கரும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்தான்.
பிரான்சில் நடைபெற்ற இந்த போட்டி இந்த ஆண்டின் கடைசி மற்றும் 19-வது பார்முலா 1 பந்தயமாகும். ஏற்கெனவே மலேசியா, பஹ்ரைன், கனடா, ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், கொரியா, ஜப்பான், இந்தியா, அபுதாபி, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இந்த ஆண்டு நடைபெற்ற கார் பந்தயங்களில் வெட்டல் வெற்றி பெற்றிருந்தார். இந்த ஆண்டுக்கான பார்முலா 1 சாம்பியன்ஷிப் பட்டத்தை வெட்டல் ஏற்கெனவே வென்றுவிட்டார்.
தொடர்ந்து 9 கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகளில் வென்ற இத்தாலியின் ஆல்பர்டோ அஸ்காரியின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். அஸ்காரி 1952-53ம் ஆண்டில் இந்த சாதனையைப் படைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT