Published : 26 Jan 2014 11:30 AM
Last Updated : 26 Jan 2014 11:30 AM
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த சானியா மிர்சா இணை இரண்டாம் இடம் பிடித்தது.
கலப்பு இரட்டையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா - ருமேனியாவின் ஹரியா டீக்கா இணை 3-6, 2-6 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கிறிஸ்டினா மிலாட்நோவிக் - கனடாவின் டேனியல் நெஸ்டர் இணையிடம் வீழ்ந்தது.
மொத்தம் 58 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டி முழுவதும் நெஸ்டர்-கிறிஸ்டினா ஆதிக்கம் செலுத்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
நெஸ்டர் - கிறிஸ்டினா இணை கடந்த ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் போட்டியிலும் கலப்பு இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றது.
அந்தப் போட்டியில் நெஸ்டர் ஜோடி, தங்களின் காலிறுதியில் இந்தியாவின் சானியா - டீக்கா ஜோடியைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT