Published : 24 Jun 2017 10:27 AM
Last Updated : 24 Jun 2017 10:27 AM
உலக ஹாக்கி லீக் அரை இறுதி தொடரில் 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
லண்டனில் நடைபெற்று வரும் இந்த தொடரில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறந்த திறனை வெளிப்படுத்திய நிலை யில் நேற்று முன்தினம் நடைபெற்ற கால் இறுதி ஆட்டத்தில் 14-வது இடத்தில் உள்ள மலேசிய அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மலேசிய அணி அரை இறுதிக்கு முன்னேறியது. கடந்த இரண்டு மாதத்தில் மலேசிய அணியிடம் இந்தியா தோல்வியை சந்திப்பது இது 2-வது முறையாகும்.
இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்த தவறினர்.
கடைசி இரு ஆட்டங்களிலும் ஏற்பட்ட தோல்வி இந்திய அணிக்கு சிறந்த பாடமாக அமையக்கூடும். இந்நிலையில் 5 முதல் 8-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் அணி தனது கால் இறுதியில் 1-3 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவிடம் தோல்வி கண்டிருந்தது.
மேலும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியிருந்தது. இந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும். அதேவேளையில் இந்திய அணி மீண்டும் ஒரு முறை ஆதிக்கம் செலுத்தி வெற்றி காண முயலும்.
மலேசியாவுக்கு எதிரான தோல்வியால் துவண்டு விடாமல் மீண்டும் இந்திய வீரர்கள் எழுச்சி காண்பதற்கு இந்த ஆட்டம் உதவக்கூடும். ஸ்டிரைக்கர்களில் ராமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளை யாடி வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக மன்தீப் சிங், தல்வீந்தர் சிங், எஸ்.வி.சுனில் ஆகி யோர் செயல்பட்டு வருகின்றனர்.
ராமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங் ஆகியோரை தவிர மற்ற ஸ்டிரைக்கர்களிடம் இருந்து சிறந்த திறன் வெளிப்பட வில்லை. இவர்களும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அணியின் வலிமை அதிகரிக்கும்.
பெனால்டி கார்னர் வாய்ப்பு களை சரியாக பயன்படுத்தாததும் இந்திய அணிக்கு பின்னடைவாக உள்ளது. இளம் வீரரான ஹர்மான்பிரித் சிங் இதில் கூடு தல் கவனம் செலுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT