Published : 19 Mar 2014 07:38 PM
Last Updated : 19 Mar 2014 07:38 PM
ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள முதல் கட்ட ஐபிஎல் சீசன் 7 போட்டிகளுக்கான கால அட்டவணை இன்று (புதன்கிழமை வெளியிடப்பட்டது.
அபுதாபியில் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கும் இப்போட்டிகள், ஏப்ரல் 30-ம் தேதி வரை 3 மைதானங்களில் மொத்தம் 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.
முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
கால அட்டவணை விவரம்:
ஏப்ரல் 16: மும்பை – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 17: டெல்லி – பெங்களூர் (இரவு 8 மணி)
ஏப்ரல் 18: சென்னை – பஞ்சாப்மாலை (மாலை 4 மணி)
ஏப்ரல்18: ஹைதராபாத் – ராஜஸ்தான் (இரவு 8 மணி)
ஏப்ரல் 19: பெங்களூர் – மும்பை (மாலை 4 மணி)
ஏப்ரல் 19: கொல்கத்தா – டெல்லி (இரவு 8 மணி)
ஏப்ரல் 20: ராஜஸ்தான் – பஞ்சாப் (இரவு 8 மணி)
ஏப்ரல் 21: சென்னை – டெல்லி (இரவு 8 மணி)
ஏப்ரல் 22: பஞ்சாப் – ஹைதராபாத் (இரவு 8 மணி)
ஏப்ரல் 23: ராஜஸ்தான் – சென்னை (இரவு 8 மணி)
ஏப்ரல் 24: பெங்களூர் – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 25: ஹைதராபாத் – டெல்லி (மாலை 4 மணி)
ஏப்ரல் 25: சென்னை – மும்பை (இரவு 8 மணி)
ஏப்ரல் 26: ராஜஸ்தான் – பெங்களூர் (இரவு 8 மணி)
ஏப்ரல் 26: பஞ்சாப் – கொல்கத்தா (இரவு 8 மணி)
ஏப்ரல் 27: டெல்லி – மும்பை (இரவு 8 மணி)
ஏப்ரல் 27: ஹைதராபாத் – சென்னை (இரவு 8 மணி)
ஏப்ரல் 28: பெங்களூர் – பஞ்சாப் (இரவு 8 மணி)
ஏப்ரல் 29: கொல்கத்தா – ராஜஸ்தான் (இரவு 8 மணி)
ஏப்ரல் 30: மும்பை – ஹைதராபாத் (இரவு 8 மணி)
இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்சினை ஏற்படும் என்பதால் ஐபிஎல் போட்டிகளை 3 பகுதிகளாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது பகுதி மே 1 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும். இதனை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு வாய்ப்பு இல்லையென்றால் போட்டிகள் வங்கதேசத்துக்கு மாற்றப்படும்.
மூன்றாவது பகுதி மே 13-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெறவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT