Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM
டி20 உலகக் கோப்பையின் தகுதிச்சுற்றில் நேபாள அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது.
சிட்டகாங் நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நேபாள அணியில் தொடக்க ஆட்டக்காரர் காக்குரேல் 53 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 56, வெசாவ்கர் 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்தனர். இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான கரீம் சாதிக் 8, கேப்டன் முகமது ஷெஸாத் 6, பின்னர் வந்த நஜிபுல்லா ஜாத்ரான் 5, நவ்ரோஸ் மங்கள் 5, கேப்டன் முகமது நபி 1 என வேகமாக வெளியேற, 9 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்து தடுமாறியது.
இதன்பிறகு வந்தவர்களில் சபியுல்லா 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, பின்வரிசையில் ஸ்டானிக்சாய் அதிரடியாக விளையாட, ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை நெருங்கியது. எனினும் வெற்றிபெற முடியவில்லை. ஸ்டானிக்சாய் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆப்கானிஸ்தான். இதனால் நேபாளம் 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
இது தகுதிச்சுற்றில் நேபாளம் பெற்ற 2-வது வெற்றியாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT