Published : 06 Apr 2014 07:08 PM
Last Updated : 06 Apr 2014 07:08 PM
இந்தியாவை வீழ்த்தி இலங்கை சாம்பியன் ஆனது. 17.5 ஆவது ஓவரில் இலங்கை வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கை 17.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் குவித்தது. இந்த வெற்றிக்கு சங்ககாராவின் அசத்தல் ஆட்டம் உறுதுணை புரிந்தது.
அஸ்வின் வீசிய 18-வது ஓவரில் 3 பவுண்டரிகளை விளாசி, இலங்கைக்கு சாம்பியன் பட்டத்தைப் பெற்று தந்தார் சங்ககாரா.
17 ஓவரில் இலங்கை 119/4
சாம்பியன் ஆகும் முனைப்பில் உள்ள இலங்கை இந்த ஓவரில் மட்டும் 15 ரன்கள் குவித்தது.
16 ஓவரில் இலங்கை 104/4
இலங்கை வலுவான நிலையில் உள்ளது. அஸ்வின் 6 ரன்களை வழங்கினார். சங்ககாரா 37 ரன்களையும், பெரேரா 6 ரன்களையும் எடுத்து களத்தில் உள்ளனர்.
15 ஓவரில் இலங்கை 98/4
அமித் மிஸ்ராவின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. அவர் 14 ரன்களை கொடுத்தார். சங்ககாரா 32 ரன்களும், பெரேரா 9 ரன்களும் எடுத்துள்ளனர்.
14 ஓவரில் இலங்கை 84/4
ரெய்னா இந்த ஓவரில் 6 ரன்களை வழங்கினார். சங்ககாரா 26 ரன்களும், பெரேரா 2 ரன்களும் எடுத்துள்ளனர்.
13 ஓவரில் இலங்கை 78/4
மிஸ்ராவின் அபார பந்துவீச்சு புதிய நம்பிக்கையை தந்துள்ளது. சங்ககாரா 23 ரன்களுடனும் பெரேரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
12.3 ஓவரில் இலங்கை 78/4; திரிமன்னே அவுட்
மிஸ்ராவின் அற்புத பந்துவீச்சில் தோனி அபார கேட்ச் பிடித்ததால் திரிமன்னே அவுட் ஆனார்.
12 ஓவரில் இலங்கை 75/3
ரெய்னாவின் பந்துவீச்சில் இலங்கையின் ரன் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. ஃபீல்டிங்கும் சிறப்பாக இருந்தது. ரெய்னா வெறும் 2 ரன்களை மட்டுமே வழங்கினார். சங்ககாரா 20 ரன்களுடனும், திரிமன்னே 7 ரன்களும் எடுத்தனர்.
11 ஓவரில் இலங்கை 73/3
அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 4 ரன்களை மட்டுமே வழங்கினார். சங்ககாரா 19 ரன்களுடனும், திரிமன்னே 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
10 ஓவரில் இலங்கை 69/3
ரெய்னா ஒரு விக்கெட்டை வீழ்த்தினாலும் 11 ரன்களை வழங்கினார். சங்ககார 17 ரன்களுடனும், திரிமன்னே 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
9.5 ஓவரில் இலங்கை 65/3; ஜெயவர்த்தனே அவுட்
ரெய்னா பந்துவீச்சில் ஜெயவர்த்தனே அடிந்த பந்தை மிட் விக்கெட்டில் அஸ்வின் அபாரமாக கேட்ச் பிடித்தார். ஜெயவர்த்தனே 24 ரன்களில் ஆட்டமிழந்தார்.
9 ஓவரில் இலங்கை 58/2
ஜடேஜாவின் பந்துவீச்சில் சங்ககாரா ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் விளாசினார். ஜடேஜா இந்த ஓவரில் மட்டும் 11 ரன்களை வழங்கினார். ஜெயவர்த்தனே 19 ரன்களுடனும், சங்ககாரா 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
8 ஓவரில் இலங்கை 47/2
ரெய்னா சிறப்பாக பந்துவீசி 5 ரன்களை விட்டுத் தந்தார். சங்ககாராவின் கேட்சை மோஹித் சர்மா தவறவிட்டது இந்தியாவுக்கு மிகுந்த ஏமாற்றம் தந்தது.
7 ஓவரில் இலங்கை 42/2
அமித் மிஸ்ரா சிறப்பாக பந்துவீசி ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். அவர் ஒரு ரன்னை மட்டுமே விட்டுத் தந்தார். ஜெயவர்த்தனே 17 ரன்களுடனும், சங்ககாரா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
6 ஓவரில் இலங்கை 41/2
அஸ்வினின் பந்துவீச்சு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. 4 ரன்களை மட்டுமே தந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஜெயவர்த்தனே 17 ரன்களுடனும், சங்ககாரா ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.
5.5 ஓவரில் இலங்கை 41/2; தில்ஷன் அவுட்
அஸ்வினுக்கு முதல் விக்கெட். தில்ஷன் விளாசிய பந்து பவுண்டரி லைனுக்கு முன்னே கோலியால் கேட்ச் பிடிக்கப்பட்டது. இது, குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக இந்தியாவுக்கு உள்ளது.
5 ஓவரில் இலங்கை 37/1
புவனேஷ்குமார் வீசிய இந்த ஓவரும் இலங்கைக்கு சாதகமாகவே இருந்தது. 10 ரன்களை அவர் கொடுத்தார். ஜெயவர்த்தனே 17 ரன்களுடனும், தில்ஷன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
4 ஓவரில் இலங்கை 27/1
மோஹித் ஷர்மாவின் பந்துவீச்சு, இலங்கை அணிக்கு ஏதுவாகவே இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள் உள்பட 15 ரன்கள் வழங்கினார். தில்ஷன் 14 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3 ஓவரில் இலங்கை 12/1
புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசி ஒரு பவுண்டரியை மட்டும் கொடுத்தார். தில்ஷன் 5 ரன்களுடனும், ஜெயவர்த்தனே 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
2 ஓவரில் இலங்கை 8/1
மோஹித் சர்மாவின் அசத்தல் ஓவர், நம்பிக்கைக்கு அடித்தளம் இட்டது. மூன்று ரன்களை மட்டும் விட்டுத் தந்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இலங்கை நிதானம் காக்க துவக்கிவிட்டது. ஜெயவர்த்தனே 2 ரன்களுடனும், தில்ஷன் ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
1.1 ஓவரில் இலங்கை 5/1; குசல் பரேரா அவுட்
மோஹித் சர்மாவின் சிறப்பான பந்துவீச்சில் குசல் பரேரா, ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் ஓவரில் இலங்கை 5/0
இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தரும் இலக்கு இல்லை என்பதால் நிதானமாகவே விளையாடுகின்றனர். புவனேஸ்வர் குமாரின் ஓவரில் 5 ரன்கள் எடுத்துள்ளது. குசல் பெரேரா 4 ரன்கள் எடுத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கைக்கு 131 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா.
இந்தியாவின் வெற்றி என்பது இப்போது பந்துவீச்சாளர்கள் வசம் உள்ளது.
கோலியின் சிறப்பான ஆட்டத்தின் துணையுடன் இந்தியா தனது இன்னிங்ஸ்சில், 4 விக்கெட் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது.
20-வது ஓவர் - இந்தியா 130/4
மலிங்கா சிறப்பாக பந்துவீசினார். கோலி கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். அவர் 77 ரன்களைச் சேர்த்தாலும், ஒட்டுமொத்தமாக இலங்கை பந்துவிச்சால் இந்தியா சரியாக ஸ்கோர் செய்யவில்லை. தோனி ஆட்டமிழக்காமல் 4 ரன்கள் எடுத்தார்.
19-வது ஓவரில் இந்தியா 123/3
குலசேகர மிகச் சிறப்பாக பந்துவீசி, இந்திய ரன் எண்ணிக்கையை கட்டுப்படுத்தினார். கோலி 76 ரன்களுடனும், தோனி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
18.1 ஓவரில் இந்தியா 119/3; யுவராஜ் அவுட்
ரன் குவிக்க திணறிய யுவராஜ் சிங் 11 ரன்களில் குலசேகர பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
18-வது ஓவரில் இந்தியா 119/2
4 ரன்களே கொடுத்த மலிங்கா பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. யுவராஜின் திணறல் ஆட்டம் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்தது. அவர் 20 பந்துகளில் 11 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 74 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
17-வது ஓவரில் இந்தியா 115/2
சேனநாயக வீசிய பந்துவீச்சில் யுவராஜ் மிகவும் திணறினார். அவர் 9 ரன்கள் எடுத்துள்ளார். கோலி 72 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
16-வது ஓவரில் இந்தியா 111/2
கோலி தாண்டவம் தொடங்கியது. முதல் பந்தில் சிக்சர், இரண்டாவது பந்தில் பவுண்டரி, மூன்றாவது பந்தில் மற்றொரு பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. கோலி 70 ரன்களுடனும், யுவராஜ் 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
15-வது ஓவரில் இந்தியா 95/2
சேனநாயக மிகச் சிறப்பாக பந்துவீசி வெறும் 2 ரன்களையே விட்டுத் தந்தார். கோலி 55 ரன்களுடனும், யுவராஜ் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
14-வது ஓவரில் இந்தியா 93/2; கோலி அரைசதம்
இந்திய துணைக் கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். யுவராஜும் அவருக்கு உறுதுணையாக உள்ளார். மலிங்காவின் கடைசி பந்தில் பவுண்டரியுடன் சேர்த்து கோலி 54 ரன்களுடனும், யுவராஜ் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
13-வது ஓவரில் இந்தியா 83/2
இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த ஓவர் இது. இதில் 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. கோலியின் சிக்சரும் இதில் அடங்கும். அவர் 46 ரன்களுடனும், யுவராஜ் 3 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
12-வது ஓவரில் இந்தியா 73/2
கோலி அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். 4-வது பந்தில் ஒரு பவுண்டரியை விளாசினார். அவர் 38 ரன்களுடனும், யுவராஜ் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
11-வது ஓவரில் இந்தியா 65/2
இந்த ஓவர், இலங்கைக்கு சாதகமாக இருந்தது. கோலி 31 ரன்களுடனும், யுவராஜ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
10.3 ஓவரில் இந்தியா 64/2
ஹேராத் பந்துவீச்சில் ரோஹித் சர்மா கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 29 ரன்கள் சேர்த்தார். கோலி 31 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் யுவராஜ் இணைந்துள்ளார்.
10-வது ஓவரில் இந்தியா 64/1
முதல் 10 ஓவர்களில் இந்தியா நிதான ஆட்டத்தைக் கடைப்பிடித்துள்ளது. ரோஹித், கோலி இணை நிலையாக விளையாடுவதால், இனி ரன் எண்ணிக்கை வெகுவாக கூட வாய்ப்புள்ளது. 10-வது ஓவரில் அதிரடி துவங்கியுள்ளது. இந்த ஓவரில் ரோஹித் ஒரு பவுண்டரியும், கோலி ஒரு சிக்சரும் விளாசினர். கோலி 31 ரன்களுடனும், ரோஹித் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
9-வது ஓவரில் இந்தியா 50/1
ஹெராத் மிகச் சிறப்பாக பந்துவீசி, இந்திய அணியைக் கட்டுப்படுத்தினார். கோலி, ரோஹித் ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்துள்ளனர்.
8-வது ஓவரில் இந்தியா 47/1
மேத்யூஸ் வெறும் 6 ரன்களே விட்டுத் தந்தார். கோலி 21 ரன்களுடனும், ரோஹித் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கையின் ஃபீல்டிங் சிறப்பாகவே உள்ளது.
7-வது ஓவரில் இந்தியா 41/1
ஹெராத் பந்துவீச்சில் கடைசி பந்தில் கோலி சிக்ஸர் அடித்து, ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்றார். இந்த ஓவரில் மட்டும் இந்தியா 10 ரன்கள் எடுத்தது. இருவரும் தலா 19 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ரன் ரேட் 5.85-ல் உள்ளது.
6-வது ஓவரில் இந்தியா 31/1
மலிங்கா மிகச் சிறப்பாக பந்துவீசி, இந்திய ரன் எண்ணிக்கையை கட்டுக்குள் வைத்தார். எனினும் கடைசி பந்தில் பவுண்டரி விளாசி ஸ்கோரை உயர்த்தினார் ரோஹித், அவர் 17 ரன்களும், கோலி 11 ரன்களும் எடுத்துள்ளனர்.
5-வது ஓவரில் இந்தியா 23/1
சேனநாயக வீசிய 5-வது ஓவரின் முதல் பந்தில் ரோஹித் பவுண்டரி விளாசினார். ரசிகர்கள் உற்சாகம் ஆகினர். 5-வது பந்தின்போது, ரன் அவுட்டில் இருந்து தனது துரித ஓட்டத்தால் கோலி தவிர்த்தார். கோலி 9 ரன்களுடனும், ரோஹித் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
4-வது ஓவரில் இந்தியா 15/1
இந்தியா தொடர்ந்து நிதானமாக பேட் செய்து வருகிறது. இந்த ஓவரில் வெறும் 4 ரன்களே சேர்க்கப்பட்டது. கோலி 8 ரன்களுடனும், ரோஹித் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
3-வது ஓவரில் இந்தியா 11/1
கோலி அதிரடி துவக்கம்: விராட் கோலி பவுண்டரியுடன் எண்ணிக்கையைத் துவக்கினார். பின்னர், நிதானம் காத்தார். கோலி 6 ரன்களுடனும், ரோஹித் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஓவர் 1.3 - இந்தியா 4/1
மேத்யூஸ் வீசிய பந்தில் ரஹானே க்ளீன் பவுல்ட் ஆனார். இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு.
முதல் ஓவர் - இந்தியா 4/0
குலசேகர வீசிய முதல் ஓவரில் நிதானமான ஆட்டத்தை இந்தியத் துவக்க வீரர்கள் கையாண்டனர். ரஹானே 3 ரன்களையும், ரோஹித் ஷர்மா 1 ரன்னையும் எடுத்தனர்.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீலிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவை முதலில் பேட் செய்ய அழைத்துள்ளது.
மலிங்கா: "கேப்டன் பொறுப்பில் மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறேன்."
தோனி: " ஒவ்வொரு சீசனுமே வித்தியாசமானதுதான்."
அணி விபரம்:
இந்தியா: தோனி (கேப்டன்), ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், அமீத் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார்
இலங்கை: மலிங்கா (கேப்டன்), தில்ஷான், கே.பெரைரா, ஜெயவத்தனா, சங்ககாரா, திரிமனே, மேத்யூஸ், டி.பெரைரா, ஹெராத், குலசேகரா, சேனநாயகா, பிரசன்னா.
* மிர்பூரில் நடைபெறும் இப்போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருந்தது. ஆனால், பாதிப்பு ஏற்படவில்லை.
* இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இன்னும் சற்று நேரத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போட்டியில் இந்தியா வென்றால் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். முன்னதாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பையில் தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இப்போதுதான் இந்திய அணி மீண்டும் 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.
அதே நேரத்தில் ஏற்கெனவே இருமுறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி கோப்பையைக் கோட்டைவிட்ட இலங்கை அணி. இப்போது 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. எனவே வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள். இந்தியாவுக்கு இப்போட்டி சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
* ஆடுகள நிலவரம்: போட்டி நடைபெறும் மிர்பூர் ஷேர் இ பங்ளா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இது மிகவும் மெதுவான ஆடுகளம். எனவே பந்துகள் மெதுவாகவே எழும்பிச் செல்லும்.
* 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நூலிழையில் பாகிஸ்தானை வென்று சாம்பியன் ஆனது. கிரிக்கெட் உலகக் கோப்பையை இருமுறை வென்று தந்த கேப்டன்கள் என்ற பெருமை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லாய்ட் ஆகியோருக்கு உண்டு. இந்திய அணி கோப்பையை வென்றால், தோனியும் அப்பட்டியலில் இடம் பிடிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT