Published : 22 Mar 2014 01:54 PM
Last Updated : 22 Mar 2014 01:54 PM

ஜிம்பாப்வே வெற்றி

சில்ஹெட் நகரில் நடைபெற்ற டி20 தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியைத் தோற்கடித்தது.

முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக எஸ்.பி.பாட்டீல் 30 ரன்களும், கேப்டன் குர்ரம் கான் 26 ரன்களும் எடுத்தனர்.

ஜிம்பாப்வே தரப்பில் வில்லியம்ஸ் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர் மஸகட்ஸா 2, கேப்டன் டெய்லர் 15, வில்லியம்ஸ் 0, சிக்கந்தர் ராசா 9, சிபான்டா 16 ரன்களில் ஆட்டமிழக்க, 9.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்து தடுமாறியது. பின்வரிசையில் களமிறங்கிய சிகும்பரா-மருமா ஜோடி அதிரடியாக விளையாட, ஜிம்பாப்வே 13.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

சிகும்பரா 21 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 53, மருமா 14 பந்துகளில் 3 பவுண்டரி களுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். எனினும் ஜிம்பாப்வேயால் சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x