Published : 20 Mar 2014 12:00 AM
Last Updated : 20 Mar 2014 12:00 AM

கேன்டிடேட்ஸ் செஸ் விஸ்வநாதன் ஆனந்த் டிரா

ரஷ்யாவில் நடைபெற்று வரும் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 5-வது சுற்றில் ரஷ்யாவின் திமித்ரி ஆன்டரிகினுக்கு எதிரான ஆட்டத்தை இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் டிரா செய்தார். 2014-ம் ஆண்டுக்கான சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் கார்ல்சனை எதிர்கொள்ளும் போட்டியாளரைத் தேர்வு செய்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிதான் கேன்டிடேட்ஸ் செஸ் போட்டியாகும்.

இதில் 5 முறை உலக சாம்பியனான ஆனந்த், ரஷ்யாவின் கிராம்னிக், ஆர்மீனியாவின் லிவோன் ஆரோனியன் உள்பட 8 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் மற்ற வீரருடன் தலா இருமுறை மோத வேண்டும். இறுதியில் முதலிடம் பிடிக்கும் வீரர் கார்ல்சனுடன் விளையாடுவார்.

இப்போட்டியில் ஆனந்த் தனது 5-வது சுற்றில் ஆன்டரிகினை எதிர்கொண்டார். கறுப்பு காய்களுடன் களமிறங்கிய அவர், 43 நகர்த்தல்களில் டிரா செய்தார். எனினும் இப்போதைய நிலையில் ஆனந்த் 2 வெற்றி, 3 டிரா ஆகியவற்றுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

ஸ்விட்லர், கிராம்னிக், ஆரோனியன் ஆகியோர் தலா 3 புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். ஆனந்த் 6-வது சுற்றில் மற்றொரு ரஷ்ய வீரர் செர்ஜி கர்ஜகின்னை எதிர்கொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x