Published : 07 May 2019 02:22 PM
Last Updated : 07 May 2019 02:22 PM
மே மாதம் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் அணியும் மோதின. இதில் முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் ஓய்வறைக்குத் திரும்பிய களநடுவர் நீஜல் லாங் நடுவர் அறைக்கதவை அடித்து சேதப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. சேதத்துக்கான தொகையை நீஜல் லாங் கொடுத்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நீஜல் லாங் வெறுப்பு.. கோபத்துக்குக் காரணமான சம்பவம்:
கடைசி ஒவரை உமேஷ் யாதவ் வீச நடுவர் நீஜல் லாங் ஒரு பந்தை நோ-பால் என்று தீர்ப்பளித்தார். ஆனால் அது நல்ல பந்து நோ-பால் அல்ல என்பது ரீப்ளேயில் தெரியவந்தது.
மைதானத்தில் உள்ள பெரிய திரையில் உமேஷ் யாதவ் கிரீஸைத் தாண்டவில்லை என்பது தெரியவர உமேஷ் யாதவ், கேப்டன் விராட் கோலி, நீஜல் லாங் இடையே கடும் வாக்குவாதம் மைதானத்தில் நடந்தது.
தவறு என்று தெரிந்தும் நீஜல் லாங் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை, இதனால் கூடுதல் பந்து வீசப்பட்டு அதில் 5 ரன்கள் சன்ரைசர்ஸுக்குக் கூடுதலாகக் கிடைத்தது. ஆனால் இந்தப் பிழை ராயல் சாலஞ்சர்ஸை பாதிக்கவில்லை பெங்களூரு அணி 4 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது.
இதில் வெறுப்படைந்த நீஜல் லாங் இன்னிங்ஸ் முடிந்து நடுவர்கள் அறைக்குத் திரும்பிய போது அறைக்கதவை எட்டி உதைத்து சேதப்படுத்தினார், ஆனால் அறையின் கண்ணாடிக் கூரைக்கு ஒன்றும் ஆகவில்லை.
இதனையடுத்து ஆட்ட நடுவர் நாராயண் குட்டியுடன் ஆலோசனை நடத்திய கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டிக்கு இந்தச் சம்பவத்தைப் புகார் செய்தது.
சம்பவம் பிசிசிஐ நிர்வாகக் கமிட்டிக்குச் சென்றவுடன் சேதத்திற்காக நடுவர் நீஜல் லாங் ரூ.5,000 கொடுத்ததாக கர்நாடகா கிரிக்கெட் சங்க செயலரும் முன்னாள் ரஞ்சி வீரருமான சுதாகர் ராவ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT