Published : 26 Apr 2014 12:07 PM
Last Updated : 26 Apr 2014 12:07 PM

ஆசிய சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் அரையிறுதியில் பி.வி.சிந்து

ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தென்கொரியாவின் கிம்சேன் நகரில் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் சிந்து தாய்லாந்தின் ஆங்பம்ரங்பன் புசனை எதிர்கொண்டார்.

இதில் முதல் கேமை 14-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சிந்து, அடுத்த இரு கேம்களிலும் உத்வேகத்துடன் விளையாடினார். இதனால் 21-13 என்ற கணக்கில் இரண்டாவது கேமை சிந்து கைப்பற்றினார். மூன்றாவது கேமிலும் தொடர்ந்து ஆக்ரோஷமாக விளையாடிய சிந்து 21-10 என்ற கணக்கில் அந்த கேமை கைப்பற்றி வெற்றியை தனதாக்கினார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். சுமார் 58 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடைபெற்றது.

இதன் மூலம் வெண்கலப் பதக்கத்தை சிந்து உறுதி செய்துள்ளார். 18 வயது வீராங்கனையான சிந்து, இப்போது சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரையுறுதியில் சீனாவின் சிக்சியாங் வாங்கை சிந்து எதிர்கொள்ள இருக்கிறார். சர்வதேச தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள வாங், சிந்துக்கு கடும் சவால் அளிப்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x