Published : 19 Apr 2019 04:41 PM
Last Updated : 19 Apr 2019 04:41 PM

நான் தோனியின் அறைக்குச் சென்றேன்....: ஹர்திக் பாண்டியா ருசிகரம்

ஹெலிகாப்டர் ஷாட் என்ற ஒன்றைக் கண்டுபிடித்து ஆடிவருபவர் தோனி, அதைத் தற்போது இந்திய கிரிக்கெட்டிலும் உலக கிரிக்கெட்டிலும் மேலும் சில வீரர்கள் ஆடப்பழகிக் கொண்டனர்.

 

யார்க்கர் லெந்த் பந்தை முழுதும் உள்ளே விட்டு அதனடியில் மட்டையை விட்டு மட்டையை ஒரு முழு சுழற்று சுழற்றுவது ஹெலிகாப்டரை ஸ்டார்ட் செய்வது போல் இருப்பதால் அது ஹெலிகாப்டர் ஷாட் என்று அழைக்கப்பட்டது. தோனி முதன் முதலில் யார்க்கருக்கு எதிராக இந்த உத்தியக் கண்டுபிடித்து உலக பவுலர்களை அச்சுறுத்தினார்.

 

தற்போது ஆப்கானின் ரஷீத் கான் கூட இந்த ஷாட்டை ஆடுகிறார். இந்தியத் தரப்பில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடுகிறார். அதுவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவே மும்பை இந்தியன்ஸின் ஹர்திக் பாண்டியா ஆட தோனி அதனை மகிழ்வுடன் ரசித்தார்.

 

இந்த ஐபிஎல் தொடரில் 9 ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியா 218 ரன்களை 194.64 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.

 

இந்நிலையி ஹர்திக் பாண்டியா இது குறித்துக் கூறியதாவது:

 

நான் தோனியின் அறைக்குச் சென்று என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் எப்படி என்றேன். அவர் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார். ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

 

நான் வலைப்பயிற்சியில் அந்த ஷாட்டை பயிற்சி செய்தேன். நான் தோனியின் அறைக்குச் சென்று என்னுடைய ஹெலிகாப்டர் ஷாட் உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்றேன். அவர் நன்றாக ஆடியதாகக் கூறினார்.

 

நான் இப்போது பந்துகளை நானே ஆச்சரியப்படும் விதத்தில் சரியாக ஆடி வருகிறேன். வலையில் கடினமாகப் பயிற்சி எடுத்து வருகிறேன்.  நான் என் மூளையைப் பயன்படுத்தி பிட்சையும் நன்றாகக் கணித்து வருகிறேன். இன்னும் 5 போட்டிகள் உள்ளன, அதன் பிறகு ப்ளே ஆஃப். தொடர் முழுதும் இதே பார்மில் தொடர்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

 

இவ்வாறு கூறினார் ஹர்திக் பாண்டியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x