Published : 28 Apr 2019 10:52 AM
Last Updated : 28 Apr 2019 10:52 AM
ஐபிஎல் டி20, 2019 தொடரில் 12 ஆட்டங்களில் 8 வெற்றி 4 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ள சிஎஸ்கே அணியை பிளே ஆஃப் சுற்றுத் தகுதி விவகாரத்தில் எந்த அணியும் அசைத்து விட முடியாத நிலையை எட்டியுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் வெற்றி பெற்றிருந்தால் 12 புள்ளிகள் பெற்றிருக்கும், ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் மிக முக்கியமான வெற்றியைப் பெற்று 10 புள்ளிகளுடன் தங்கள் பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2019-ல் முதன் முதலில் பிளே ஆஃப் சுற்றுத் தகுதியை உறுதி செய்த அணியாகியுள்ளது.
இதன் மூலம் அனைத்து ஐபிஎல் தொடர்களிலும் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற வகையில் 100% ரெக்கார்ட் வைத்துள்ளது தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் தலா 14 புள்ளிகளுடன் 2,3 இடங்களில் உள்ளன. சன் ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் 10 புள்ளிகளுடன் 4, 5-ல் உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளன, இதில் கொல்கத்தா, பெங்களூரு 8 புள்ளிகளுடன் கடைசி 2 இடங்களில் உள்ளன.
மீதமுள்ள ஆட்டங்களில் சென்னை அணி நீங்கலாக மற்ற அணிகள் எப்படி வென்றாலும் தோற்றாலும் எந்த ஒரு கலவையான முடிவுகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடத்தை அடித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் டாப் 4 இடங்களில் சிஎஸ்கே வந்துள்ளது சாதனைதான். சிஎஸ்கேவின் 16 புள்ளிகளை தற்போது மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் 14 புள்ளிகளில் இருப்பதால் சிஎஸ்கேவின் 16 புள்ளிகளை எட்டமுடியும் சன்ரைசர்ஸ், கிங்ஸ் லெவன் அணிகளில் ஏதாவது ஒரு அணிதான் 16 புள்ளிகள் பெற முடியும்.
கேகேஆர், ராயல்ஸ். பெங்களூரு ஆகிய அணிகள் எப்படி ஆடினாலும் அதிகபட்சம் 14 புள்ளிகளையே பெற முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT