Published : 14 Apr 2019 03:13 PM
Last Updated : 14 Apr 2019 03:13 PM

தோனிக்கு தடை விதிக்கக் கோரி மிகச்சரியாகச் சொன்னார் சேவாக் : மைக்கேல்  வான் வரவேற்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் நடுவருடன் மகேந்திரசிங் தோனி விவாதம் செய்திருக்கக் கூடாது, தோனியை குறைந்தபட்சம் 2-3 போட்டிகளுக்காவது தடை செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் காட்டமாகத் தெரிவித்துள்ள கருத்துக்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வரவேற்பளித்துள்ளார்.

 

12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் நடந்தது. இந்த ஆட்டத்தில் ராஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வீழ்த்தியது

 

இந்த போட்டியில் கடைசி ஓவரில் ஸ்டோக்ஸ் வீசிய 4-வது பந்தை சான்ட்னர்  எதிர்கொண்டார். இந்த பந்து பேட்ஸ்மேனின் இடுப்புக்கு மேல் சென்றது என்று நேர் நடுவர் நோ-பால் எனக்கூற ஸ்கொயர் லெக் நடுவர் நோ-பால் இல்லை என்றார். இது பற்றிய குழப்பம் அதிகரிக்க, எல்லைக்கோட்டருகே நின்று கொண்டிருந்த ‘கூல்’ தோனி ஆவேசமாக மைதானத்துக்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதம் புரிந்தார்.

 

இதனையடுத்து அவருக்கு அபராதம் விதித்தது ஐபிஎல் நிர்வாகம். ஆனால் இது போதாது என்று பிஷன் பேடி சாட, சேவாக் 2-3 போட்டிகளுக்கு தோனியை தடைசெய்ய வேண்டுமென்று காட்டமாகத் தெரிவித்தார். இதனை பிம்ப வழிபாட்டு மனநிலையிலுள்ள தோனி ரசிகர்கள் ஏற்கவில்லை. ஆனால் கிரிக்கெட்டில் தரம் பாதுகாக்கப்பட வேண்டும், ஸ்பிரிட் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் சேவாகை வரவேற்றுள்ளனர்.

 

அந்த வகையில் தோனிக்குத் தடை விதித்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த சேவாக் கூறியதைக் குறிப்பிட்டு மைக்கேல் வான் கூறும்போது, “விரேந்திர சேவாக் கிரிக்பஸில் கூறும்போது பிட்சில் ஊடுருவிய தோனியை 2 போட்டிகளுக்குத் தடை செய்ய வேண்டுமென்றார். நானும் இதற்கு மேல் கேட்கவில்லை. தோனி செய்த காரியம் ஏற்க முடியாதது என்பதை பிற வீரர்களுக்கும் செய்தியாகத் தெரிவிக்குமாறு தோனிக்கு 2 போட்டிகள் தடை விதித்துத்தான் இருக்க வேண்டும்” என்று தன் ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.

 

இவரது ட்வீட்டுக்கு பலரும் பதில் அளித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x