Published : 03 Apr 2014 08:03 PM
Last Updated : 03 Apr 2014 08:03 PM
டி20 உலகக் கோப்பை அரையிறுதியில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
மழையால் ஆட்டம் முழுமையாக நடைபெற முடியாத அரையிறுதிப் போட்டியில், இலங்கை அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் 161 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 13.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
பிராவோ 30 ரன்களையும், சாமுவேல்ஸ் ஆட்டமிழக்காமல் 18 ரன்களையும், ஸ்மித் 17 ரன்களையும் எடுத்தனர். கெயில் 3 ரன்களிலும், சிம்மன்ஸ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இலங்கை தரப்பில் மலிங்கா 2 விக்கெட்டுகளையும், குலசேகர மற்றும் பிரசன்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, திரிமன்னே 44 ரன்களையும், மேத்யூஸ் 40 ரன்களையும் எடுத்தனர். துவக்க ஆட்டக்காரர்களான தில்ஷனின் 39 ரன்களும், பரேராவின் 26 ரன்களும் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தந்தன.
பிரசன்னா ஆட்டமிழக்காமல் 6 ரன்கள் எடுத்தார். சங்ககாரா ஒரு ரன் மட்டுமே எடுத்தார். ஜெயவர்த்தனே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சன்டோகி 2 விக்கெட்டுகளையும், பத்ரீ, ரசல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT