Published : 17 Nov 2025 09:36 AM
Last Updated : 17 Nov 2025 09:36 AM

டெஃப் ஒலிம்பிக்ஸ் போட்டி: இந்திய வீரர் தனுஷுக்கு தங்கம்

தனுஷ் ஸ்ரீகாந்த் | கோப்புப் படம்

புதுடெல்லி: டெஃப்​ ஒலிம்​பிக்ஸ் போட்​டி​யில் இந்​திய துப்​பாக்​கிச் ​சுடு​தல் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் தங்​கம் வென்​றார்.

ஜப்​பானின் டோக்​கியோ நகரில் காது கேளாதோருக்​கான டெஃப் ​ஒலிம்​பிக்ஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற ஆடவர் 10 மீட்​டர் ஏர்​ரைபிள் போட்​டி​யில் இந்​திய வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் 252.2 புள்​ளி​கள் குவித்து முதலிடம் பிடித்து தங்​கம் வென்​றார்.

இதே பிரி​வில் இந்​திய வீரர் முகமது முர்​டாஸா வனியா 250.1 புள்​ளி​களு​டன் 2-வது இடம்​பெற்று வெள்​ளியை வென்​றார். கொரியா வீரர் பேக் செயுங்​காக் 223.6 புள்​ளி​களு​டன் 3-வது இடத்​தைக்​ கைப்​பற்​றி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x