Published : 17 Nov 2025 08:37 AM
Last Updated : 17 Nov 2025 08:37 AM

உலகக் கோப்பை செஸ்: ஹரிகிருஷ்ணா தோல்வி

பனாஜி: ஃபிடே உல​கக் கோப்பை செஸ் தொடரில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான பி.ஹரி​கிருஷ்ணா தோல்வி அடைந்​தார்.

கோவா​வின் பனாஜி​யில் இந்​தத் தொடர் நடை​பெற்று வரு​கிறது. நேற்று நடை​பெற்ற 5-வது சுற்​றின் டை-பிரேக்​கரில் இந்​திய கிராண்ட்​ மாஸ்​டர் ஹரி ​கிருஷ்ணா​வும், பெரு நாட்​டைச் சேர்ந்த கிராண்ட்​ மாஸ்​டர் ஜோஸ் எடு​வார்டோ மார்​டினஸ் அல்​கான்​டா​ரா​வும் மோதினர். இதில் அல்​கான்​டாரா வெற்றி பெற்று அடுத்த சுற்​றுக்​குள் நுழைந்தார். இதையடுத்து தொடரிலிருந்து ஹரி ​கிருஷ்ணா வெளி​யேறி​னார்.

நேற்று நடை​பெற்ற மற்​றொரு 5-வது சுற்று ஆட்​டத்​தில் இந்​திய கிராண்ட் ​மாஸ்​டர் அர்​ஜுன் எரி​கைசி​யும், கிராண்ட் ​மாஸ்​டர் லெவோன் அரோனியனும்​ (அர்​மீனி​யா) மோதினர். இதில் அர்​ஜுன் எரி​கைசி 1.5 – 0.5 என்ற கணக்​கில் வெற்றி பெற்று கால் இறு​திக்கு முன்​னேறி​னார். இன்று நடை​பெறவுள்ள கால் இறுதி ஆட்​டத்​தில் அர்​ஜுன் எரி​கைசி, கிராண்ட்​மாஸ்​டர் வெய்யி​யுடன்​ மோதவுள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x