Published : 15 Nov 2025 08:59 AM
Last Updated : 15 Nov 2025 08:59 AM

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்: வங்கதேசம் இன்னிங்ஸ் வெற்றி

சைல்ஹெட்: வங்கதேசம் - அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

வங்கதேசம் 141 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 587 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 70.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக ஆன்டி மெக்பிரின் 52 ரன்கள் சேர்த்தார். வங்கதேச அணி தரப்பில் ஹசன் முராத் 4, தைஜூல் இஸ்லாம் 3, நஹித்
ராணா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x