Published : 15 Nov 2025 08:45 AM
Last Updated : 15 Nov 2025 08:45 AM
டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் அங்கிதா பகத் 7-3 என்ற கணக்கில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தென் கொரியாவின் சுஹியோனை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
ஆடவருக்கான ரீகர்வ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா 6-2 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ராகுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். 2-வது இடத்தை பிடித்த ராகுல் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரை இந்தியா 6 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்து நிறைவு செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT