Published : 14 Nov 2025 07:07 AM
Last Updated : 14 Nov 2025 07:07 AM

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்டில் இன்று மோதல்: சுழல் ஆயுதத்தை சமாளிக்குமா இந்தியா?

கொல்கத்தா: இந்​தியா- தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. இந்த போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி​யின் வலு​வான சுழற்​பந்து வீச்சு இந்​திய பேட்​டிங் வரிசைக்கு கடும் சவால் அளிக்​கக்​கூடும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

தெம்பா பவுமா தலை​மையி​லான தென் ஆப்​பிரிக்க அணி இந்​தி​யா​வில் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இரு அணி​கள் இடையி​லான 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்​டம் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்​கு​கிறது. உலக டெஸ்ட் சாம்​பிய​னான தென் ஆப்​பிரிக்க அணி வலு​வான வேகப்​பந்து வீச்சை கொண்ட அணி என்​பது அனை​வரும் அறிந்​தது​தான். ஆனால் தற்​போது அந்த அணி சுழற்​பந்து வீச்​சிலும் வலு​வான​தாக மாறி உள்​ளது.

கடந்த மாதம் பாகிஸ்​தானில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை தென் ஆப்​பிரிக்க அணி 1-1 என டிரா செய்​திருந்​தது. இந்​தத் தொடரில் தென்ஆப்பிரிக்க அணி கைப்​பற்​றிய 39 விக்​கெட்​களில் 35-ஐ கேசவ் மஹா​ராஜ், சைமன் ஹார்​மர், செனுரன் முத்​து​சாமி ஆகியோரை உள்​ளடக்​கிய சுழல் கூட்​டணி வீழ்த்​தி​யிருந்​தது. சொந்த மண்​ணில் பாகிஸ்​தான் சுழற்​பந்து வீச்​சாளர்​களான நோமன் அலி, சஜித் கான், ஆசீப் அப்​ரிடி ஆகியோர் கூட்​டாக 27 விக்​கெட்​களை மட்​டுமே கைப்​பற்​றிய நிலை​யில் தென் ஆப்​பிரிக்க சுழற்​பந்து வீச்​சாளர்​கள் மேம்​பட்ட செயல் திறனை வெளிப்படுத்தியிருந்​தனர். 36 வயதான சைமன் ஹார்​மர் முதல்தர கிரிக்​கெட்​டில் ஆயிரம் விக்​கெட்​களை வீழ்த்​தி​யுள்​ளார். இந்​திய ஆடுகளங்களுக்கு அவர், ஒன்றும் புதி​ய​வர் இல்​லை.

கடந்த 2015-ம் ஆண்டு சுற்​றுப்​பயணத்​தில் மொகாலி, நாக்​பூர் டெஸ்​டில் அவர், விளை​யாடி​யிருந்​தார். அப்​போது சேதேஷ்வர் புஜா​ரா, ரோஹித் சர்மா, ரித்​தி​மான் சாஹா ஆகியோரது விக்​கெட்​களை சைமன் ஹார்​மர் வீழ்த்​தி​யிருந்​தார். தற்​போது 10 வருடங்​களுக்கு பிறகு அவர், இந்​திய மண்ணில் விளை​யாட உள்​ளார். கடந்த மாதம் ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்ற பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான டெஸ்ட் போட்​டி​யில் சைமன் ஹார்மர் 8 விக்​கெட்​களை வீழ்த்தி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பு செய்​திருந்​தார்.

இது ஒரு​புறம் இருக்க ஈடன் கார்​டன் மைதான ஆடு​களத்​தின் தன்மை எப்​படி இருக்​கும் என்ற எதிர்​பார்ப்பு அனை​வரது மத்​தி​யிலும் எழுந்​துள்​ளது. இந்​திய பேட்​டிங் பயிற்​சி​யாளர் சிதான்ஷு கோடக், கேப்​டன் ஷுப்​மன் கில், தலைமை பயிற்​சி​யாளர் கவுதம் கம்​பீர் ஆகியோர் பலமுறை ஆடுகளத்​தில் ஆய்​வு​களை மேற்​கொண்​டுள்ள நிலை​யில், மேற்கு வங்க கிரிக்​கெட் சங்​கத் தலை​வர் சவுரவ் கங்​குலி, ஆடு​களம் “ரேங்க்​-டர்​ன​ராக இருக்​காது” என்று உறு​தி​யளித்​துள்​ளார்.

கடந்த காலங்​களில் கொல்​கத்தா ஆடு​களம் வேகப்​பந்து வீச்​சுக்கு கைகொடுத்​துள்​ளது. தொடக்​கத்​தில் பந்​துகளின் நகர்வு சிறப்​பாக இருந்துள்ளது. அதேவேளை​யில் பிற்​பகு​தி​யில் ரிவர்ஸ் ஸ்விங்​கிற்கு உதவி உள்​ளது. இம்​முறை​யும் ஆடு​களம் அதே​போன்று செயல்​பட்​டால் ஜஸ்​பிரீத் பும்ரா இந்​திய அணி​யின் முக்​கிய துருப்பு சீட்​டாக இருப்​பார். அவருடன் 2-வது வேகப்​பந்து வீச்​சாள​ராக ஆகாஷ் தீப் களமிறங்​கக்​கூடும்.

ஏனெனில் மேற்கு வங்​கத்தை சேர்ந்த அவர், ஆடு​களத்​தின் தன்​மைக்கு ஏற்பட சிறந்த திறனை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும். கடந்த 15 வருடங்​களில் ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெற்ற டெஸ்ட் போட்​டிகளில் வீழ்த்​தப்​பட்ட 159 விக்​கெட்​களில் 97 விக்​கெட்​களை வேகப்​பந்து வீச்சாளர்​கள் கைப்​பற்றி உள்​ளனர். தொடக்​கத்​தி​லும், இறு​தி​யிலும் பந்​தின் தையல் நகர்​வும், ஸ்விங்​கும் பிர​தான பங்கு வகித்​துள்​ளது.

ஷுப்​மன் கில்​லின் தலை​மையி​லான இளம் இந்​திய அணி நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்​பியன்​ஷிப் சுழற்​சி​யில் இங்​கிலாந்​தில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை 2-2 என்ற சமனில் முடித்​திருந்​தது. அந்​தத் தொடரில் வேகம் மற்​றும் ஸ்விங்​குக்கு சாதக​மான ஆடு​களங்​களை இந்​திய அணி சிறப்​பாக தகவ​மைத்​துக் கொண்டு அற்​புத​மாக செயல்​பட்​டிருந்​தது. தொடர்ந்து பலவீன​மான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்கு எதி​ராக சொந்த மண்​ணில் நடை​பெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என முழு​மை​யாக வென்​றிருந்​தது.

இருப்​பினும் சொந்த மண்​ணில் கடந்த ஆண்டு நியூஸிலாந்து அணிக்கு எதி​ரான டெஸ்ட் தொடரை இந்​திய அணி 0-3 என இழந்த விதம் வீரர்​களின் மனதில் ஆறாத வடு​வாக இருக்​கக்​கூடும். அந்​தத் தொடரில் சுழலுக்கு சாதக​மாக அமைக்​கப்​பட்ட ஆடு​களங்​களில் நியூஸிலாந்து அணி​யின் அஜாஸ் படேல், மிட்​செல் சாண்ட்​னர், கிளென் பிலிப்ஸ் ஆகியோரை உள்​ளடக்​கிய சுழல் கூட்​டணி 36 விக்​கெட்​களை வேட்​டை​யாடி இந்​திய அணியை படு​தோல்வி அடையச் செய்​திருந்​தது. தற்​போது தென் ஆப்​பிரிக்க அணி​யிலும் அதே அளவி​லான தரமான சுழற்​பந்து வீச்​சாளர்​கள் இருப்​ப​தால் இம்​முறை இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​தக்​கூடும்.

அந்த வகை​யில், சுழற்​பந்து வீச்​சுக்கு எதி​ராக சிறப்​பாக செயல்​படு​வதற்​கான வழிகளை இந்​திய பேட்​ஸ்​மேன்​கள் கண்​டறிந்து செயல்​படக்​கூடும். ரிஷப் பந்த் அணிக்கு மீண்​டும் திரும்பி இருப்​பது பலம் சேர்க்​கக்​கூடும். மேலும் துருவ் ஜூரெலும் பேட்​டிங்​கில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடும். தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணிக்கு எதி​ரான டெஸ்​டில் அவர், 2 சதங்​கள் விளாசி​யிருந்​தார். ஆல்​ர​வுண்​டர்​களாக ரவீந்​திர ஜடேஜா, வாஷிங்​டன் சுந்​தர் பலம் சேர்க்​கக் ​கூடும். இவர்​களு​டன் 3-வது சுழற்​பந்து வீச்​சாள​ராக அக்​சர் படேல் அல்​லது குல்​தீப் யாதவ் இடம் பெறக்​கூடும்.

தென் ஆப்​பிரிக்க அணி​யின் பேட்​டிங்​கில் தெம்பா பவு​மா, எய்​டன் மார்க்​ரம், ரியான் ரிக்​கெல்​டன், டிரிஸ்​டன் ஸ்டப்​ஸ், ஜுபைர் ஹம்​சா, கைல் வெர்​ரெய்ன், டோனி டி ஸோர்ஸி நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய​வர்​களாக உள்​ளனர். ஆல்​-ர​வுண்​டர்​களாக கார்​பின் போஷ், வி​யான் முல்​டர் சிறந்த பங்​களிப்பை வழங்க முயற்​சிக்​கக்​கூடும். காகிசோ ரபா​டா, மார்கோ யான்​சன் ஆகியோர்​ தொடக்​க ஓவர்​களில்​ இந்​தி​ய அணி​யின்​ பேட்​டிங்​ வரிசைக்​கு அழுத்​தம்​ கொடுக்​கக்​கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x