Published : 11 Nov 2025 10:59 AM
Last Updated : 11 Nov 2025 10:59 AM

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தோல்வி

விசாகப்​பட்​டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்​கெட் தொடரில் ‘ஏ’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள தமிழ்​நாடு - ஆந்​திரா அணி​கள் இடையி​லான ஆட்​டம் விசாகப்​பட்​டினத்​தில் நடை​பெற்று வந்​தது.

இதன் முதல் இன்​னிங்​ஸில் தமிழக அணி 182 ரன்​களும், ஆந்​திரா 177 ரன்​களும் எடுத்​தன. 5 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய தமிழக அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 29 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 102 ரன்​கள் எடுத்​தது.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய தமிழக அணி 70.3 ஓவர்​களில் 195 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. பிரதோஷ் ரஞ்​ஜன் பால் 29, கேப்​டன் சாய் கிஷோர் 16, பாபா இந்​திரஜித் 6, ஆந்த்ரே சித்​தார்த் 33, சோனு யாதவ் 28, வித்​யூத் 2, திரிலோக் நாக் 3 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். ஆந்​திர அணி சார்​பில் சவுரப் குமார் 4, திரிபூர்ண விஜய் 2, பிரித்வி ராஜ் 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

201 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆந்​திர அணி 41.2 ஓவர்​களில் 6 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. அபிஷேக் ரெட்டி 75 பந்​துகளில், 11 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் கரண் ஷிண்டே 64 பந்​துகளில், 8 பவுண்​டரி​களு​டன் 51 ரன்​களும் விளாசினர். அஸ்​வின் ஹெப்​பார் 21, கலி​திண்டி ராஜு 20 ரன்​கள் சேர்த்​தனர்.

4 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆந்​திர அணிக்கு முழு​மை​யாக 6 புள்​ளி​கள் கிடைத்​தன. தமிழக அணிக்கு நடப்பு தொடரில் இது 2-வது தோல்​வி​யாக அமைந்​தது. இது​வரை 4 ஆட்​டங்​களில் விளை​யாடி உள்ள தமிழக அணி ஒரு வெற்​றியை கூட பதிவு செய்​ய​வில்​லை. 2 ஆட்​டங்​களை டிரா செய்திருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x