Published : 11 Nov 2025 10:26 AM
Last Updated : 11 Nov 2025 10:26 AM

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்திய அணிக்கு ஜோதி கேப்டன்

புதுடெல்லி: ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்​வர் 25 முதல் டிசம்​பர் 13 வரை சிலி நாட்​டில் உள்ள சான்​டி​யாகோ நகரில் நடை​பெறுகிறது. இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் 18 பேர் கொண்ட இந்​திய அணி அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஜோதி சிங் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இந்​தத் தொடரில் இந்​திய அணி ‘சி’ பிரி​வில் இடம் பெற்​றுள்​ளது. இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் டிசம்​பர் 1-ல் நமீபி​யா​வுடன் மோதுகிறது. தொடர்ந்து டிசம்​பர் 3-ம் தேதி ஜெர்​மனி​யுட​னும், டிசம்​பர் 5-ம் தேதி அயர்​லாந்​துட​னும் இந்​திய அணி பலப்​பரீட்சை நடத்​துகிறது. லீக் சுற்​றின் முடி​வில் ஒவ்​வொரு பிரி​விலும் முதலிடம் பிடிக்​கும் அணி​கள் நாக் அவுட் சுற்​றுக்கு முன்​னேறும். நாக் அவுட் சுற்று டிசம்​பர் 7 முதல் 13 வரை நடை​பெறுகிறது.

அணி விவரம்: நிதி, எங்​கில் ஹர்ஷா ராணி மின்ஸ் (கோல்​கீப்​பர்​கள்), மனிஷா, லால்​தன்​லுஅலங்​கி, சாக் ஷி சுக்​லா, பூஜா சாஹூ, நந்​தினி (டிஃபன்​டர்​கள்), சாக் ஷி ராணா, இஷி​கா, சுனெலிதா டோப்​போ, ஜோதி சிங், கைடெம் ஷிலைமா சானு, பினிமா தன் (நடுகள வீராங்​க​னை​கள்), சோனம், பூர்​ணிமா யாதவ், கனிகா சிவாச், ஹினா பானோ, சுக்வீர் கவுர் (முன்கள வீரர்கள்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x