Published : 10 Nov 2025 11:14 AM
Last Updated : 10 Nov 2025 11:14 AM

டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ்: எலீனா ரைபாகினா சாம்பியன்

ரியாத்: சவுதி அரேபி​யா​வின் ரியாத்​தில் நடை​பெற்று வரும் டபிள்​யூடிஏ பைனல்ஸ் டென்​னிஸ் போட்​டி​யில் கஜகஸ்​தான் வீராங்​கனை எலீனா ரைபாகினா சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

8 முன்​னணி வீராங்​க​னை​கள் பங்​கேற்ற இந்த போட்டி கடந்த ஒரு வார​மாக ரியாத்​தில் நடை​பெற்று வந்​தது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற இறு​திச் சுற்​றில் 6-ம் நிலை வீராங்​க​னை​யான ரைபாகி​னா, முதல் நிலை வீராங்​க​னை​யும், பெலாரஸ் நாட்​டைச் சேர்ந்​தவரு​மான அரினா சபலெங்கா​வுடன் மோதி​னார்.

இதில் ரைபாகினா 6-3, 7-6 (7/0) என்ற செட் கணக்​கில் முதல் நிலை வீராங்​க​னை​யான சபலெங்​காவை அதிர்ச்​சித் தோல்​வி​யுறச் செய்து
சாம்​பியன் பட்​டம் வென்​றார்.

இதுகுறித்து ரைபாகினா கூறும்​போது, “இந்த வாரம் எனக்கு நம்ப முடி​யாத வார​மாக அமைந்​தது. இந்​தப் போட்​டி​யில் நான் பங்​கேற்​கும்​போது இதில் பட்​டம் வெல்​வேனா என்ற சந்​தேகம் இருந்​தது. ஆனால் எதிர்​பா​ராத வகை​யில் நான் பட்​டம் வென்​றதை என்​னாலேயே நம்ப முடிய​வில்​லை.

முந்​தைய சுற்​றுகளில் முன்​னிலை வீராங்​க​னை​கள் இகா ஸ்வி​யாடெக், அமந்தா அனிசிமோ​வா, ஜெஸ்​ஸிகா பெகுலா ஆகியோரை வீழ்த்​தி​யதை மறக்க முடி​யாது” என்​றார். 2022-ல் விம்​பிள்​டன் கிராண்ட்​ஸ்​லாம் டென்​னிஸ் போட்​டி​யில் பட்​டம் வென்​றவர் ரைபாகினா என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x