Published : 10 Nov 2025 10:28 AM
Last Updated : 10 Nov 2025 10:28 AM

மேற்கு இந்தியத் தீவுகளுடன் 3-வது டி20: 9 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி

சாக்ஸ்டன்: மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணிக்​கெ​தி​ரான 3-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

இந்த போட்டி நெல்​சன் பகு​தி​யிலுள்ள சாக்​ஸ்​டன் ஓவல் மைதானத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் முதலில் விளை​யாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 177 ரன்​கள் குவித்​தது. நியூஸிலாந்து அணி​யின் டெவன் கான்வே 56, டிம் ராபின்​சன் 23, ரச்​சின் ரவீந்​திரா 26, டேரில் மிட்​செல் 41, மைக்​கேல் பிரேஸ்​வெல் 11 ரன்​கள் எடுத்​தனர்.

178 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 19.5 ஓவர்​களில் 168 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.
அமிர் ஜாங்கு 5, அலிக் அத்​த​னாஸ் 31, ஷாய் ஹோப் 1, அகீம் ஆகஸ்ட் 24, ஷெர்​பான் ருதர்​போர்ட் 2, ரோமன் பாவெல் 2, ஜேசன் ஹோல்​டர் 3, ரொமாரியோ ஷெப்​பர்ட் 49, மேத்யூ போர்ட் 4 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து நியூஸிலாந்து அணி 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றது.

5 போட்​டிகள் கொண்ட இந்​தத் தொடரில் நியூஸிலாந்து அணி தற்​போது 2-1 என்ற கணக்​கில் முன்​னிலை வகிக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x