Published : 09 Nov 2025 11:22 AM
Last Updated : 09 Nov 2025 11:22 AM

2-வது டெஸ்டில் துருவ் ஜூரெல் மீண்டும் சதம்: தென் ஆப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு 417 ரன்கள் இலக்கு

பெங்களூரு: இந்​தியா ‘ஏ’ - தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி​கள் இடையி​லான 2-வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி பெங்​களூரு​வில் உள்ள பிசிசிஐ சிறப்பு மையத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​தியா ‘ஏ’ அணி 255 ரன்​களும், தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 221 ரன்​களும் எடுத்​தன.

34 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 24 ஓவர்​களில் 3 விக்​கெட்​கள் இழப்​புக்கு 78 ரன்​கள் எடுத்​தது. அபிமன்யு ஈஸ்​வரன் 0, தேவ்​தத் படிக்​கல் 24, சாய் சுதர்​சன் 23 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கே.எல்​.​ராகுல் 26 ரன் களு​ட​னும், குல்​தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்​காமலும் இருந்​தனர்.

நேற்று 3-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய இந்​தியா ‘ஏ’ அணி 89.2 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 382 ரன்ள் குவித்த நிலை​யில் டிக்​ளேர் செய்​தது. கே.எல்​.​ராகுல் 27, குல்​தீப் யாதவ் 16 ரன்​களில் ஆட்​ட​மிழந்​தனர். கேப்​டன் ரிஷப் பந்த் 54 பந்​துகளில், 4 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 65 ரன்​களும், ஹர்ஷ் துபே 116 பந்​துகளில், 12 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 84 ரன்​களும் விளாசி ஆட்​ட​மிழந்​தனர்.

முதல் இன்​னிங்​ஸில் சதம் விளாசிய துருவ் ஜூரெல் இம்​முறை 170 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 15 பவுண்​டரி​களு​டன் 127 ரன்​கள் விளாசி அசத்​தி​னார். தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி சார்​பில் ஒகுஹ்லே செலே 3 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார். இதையடுத்து 417 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்கா ‘ஏ’ அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 11 ஓவர்​களில் விக்​கெட் இழப்​பின்றி 25 ரன்​கள் எடுத்​தது.

ஜோர்​டான் ஹெர்​மான் 15, லெசெகோ செனோக்​வானே 9 ரன்​களு​டன் ஆட்​ட​மிழக்​காமல் இருந்​தனர். கைவசம் 10 விக்​கெட்​கள் முழு​மை​யாக இருக்க வெற்​றிக்கு மேற்​கொண்டு 392 ரன்​கள் தேவை என்ற நிலை​யில் இன்று கடைசி நாள் ஆட்​டத்தை சந்​திக்​கிறது தென் ஆப்​பிரிக்​கா ‘ஏ’ அணி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x